விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான மெளன ராகம் சீசன் 2 சீரியலில், சக்தியாக நடித்து தமிழகம் முழுவதும் பிரபலமானவர் ரவீனா தாஹா.
சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரவீனா, இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தன்னுடைய விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து கொள்வார்.
அப்படி ரவீனா பகிர்ந்த ஒரு இன்ஸ்டா பதிவு இப்போது பலரையும் கவர்ந்தது.
அதில் ரவீனா தன் பழைய புகைப்படம் மற்றும் இப்போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து, தன் அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
’இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராகுல் அண்ணா... உங்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட ஆண்டாக இருக்க வாழ்த்துக்கள்! உங்கள் சின்ன தங்கை என்பதால் நான் எப்போதும் உங்களை மிகவும் ரசித்தேன்.
சில நேரங்களில் நீங்கள் என்னை மிகவும் ஊக்கப்படுத்துகிறீர்கள்.
ஒருவரால் எப்படி இவ்வளவு நல்லவராக இருக்க முடியும் என்று உங்களைப் பார்த்து எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.. அம்மாவுக்கு நீங்கள் நல்ல மகன், உங்கள் ஆசிரியர்களுக்கு நல்ல மாணவர், உங்கள் நண்பர்களுக்கு நல்ல நண்பர், உங்கள் சிறிய சகோதரிக்கு ஒரு நல்ல சகோதரர்!
நான் இதுவரை சொல்லாத ஒரு விஷயத்தை உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன், நீங்கள் எனக்கு நிறைய அர்த்தம், உங்களை மிகவும் நேசிக்கிறேன். நாம் இன்னும் ஒன்றாக அதிக புகைப்படங்களை எடுக்க வேண்டும்…
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராகுல் அண்ணா!! என்றும் அன்புடன் -ஆர்.டி’ என்று ரவீனா அதில் உணர்ச்சிபொங்க பதிவிட்டுள்ளார்.
இதைப் பார்த்த ஃபேன்ஸ், உங்களை விட உங்க அண்ணன் கியூட்டா இருக்காங்க… அந்த குட்டி பாப்பா சிரிப்பு அப்படியே தொடருது..
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மச்சான்..என கமெண்டில் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil