விஜய் டிவியில் தினமும் இரவு ஒளிபரப்பான சீரியல் மெளன ராகம் சீசன் 2. இதில் ரவீணா தாகா, ராஜீவ் பரமேஸ்வர், சிப்பி ரஞ்சித், ஷில்பா, சல்மான், ராகுல் என பலர் நடித்தனர். இந்த சீரியல் இப்போது முடிவுக்கு வந்தது.
இதனிடையே ரவினா சமீபத்தில் இன்ஸ்டாவில் பகிர்ந்த ஒரு பதிவு இப்போது வைரல் ஆகியுள்ளது. மௌனராகம் 2 சீரியலின் இறுதிநாள் ஷூட்டிங் போது, ஒட்டுமொத்த சீரியல் குழுவும் ஒன்றாக இணைந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த ரவினா அதில், “ஒவ்வொரு பயணமும் இறுதியில் முடிய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தொடங்குகிறது. இது கேட்பதற்கு எவ்வளவு எளிதாக இருந்தாலும், அதுதான் கடினமான உண்மை.
எனது வாழ்க்கையின் இந்த சிறப்புமிக்க கட்டத்தின் இறுதி நாள் முடிவுக்கு வந்துவிட்டது. இந்த சவாலில் என்னை தள்ளியதற்கும், உங்கள் சக்தியாக என்னை மாற்றியமைத்த என் மீதான உங்கள் அசைக்க முடியாத நம்பிக்கைக்கும், சிப்பி ரஞ்சித், சந்துரு துரையப்பா, விஜய்
மௌனராகம் உங்களுக்கு எவ்வளவு சிறப்பு வாய்ந்தது மற்றும் சக்தி எவ்வளவு சிறப்பு வாய்ந்தவள் என்பதை நான் அறிவேன்.
மனோஜ் சார் மற்றும் அவரது குழுவினருக்கு நன்றி. நடிப்புக்கு ஒரு புதிய அர்த்தத்தைக் கற்றுக்கொடுத்து, என்னை சக்தியாக வடிவமைத்தவர்.
கேமரா குழு, சக்தியை அற்புதமாக வடிவமைத்த எங்கள் திரைக்கதை/வசன எழுத்தாளர் மற்றும் குழுவினருக்கு நன்றி..
எல்லா நேரங்களிலும் ஒருவருக்கொருவர் பலமாக இருப்பதற்கு என் சக கலைஞர்களுக்கும் எனது குடும்பத்திற்கும் நன்றி..
எனது ADs குழுவிற்கு நன்றி.. என் செல்லக்குட்டிகள் அனைவருக்கும் நன்றி. பார்வையாளர்களுக்கு நன்றி
நல்ல விஷயங்கள் விரைவில் முடிவடையும் ஆனால் அழகான நினைவுகளால் நம் இதயங்களை நிரப்பும்”, இப்படி உணர்வு பொங்க ரவீனா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
இதைப் பார்த்த ரசிகர்கள், சீக்கிரம் முடிச்சிட்டிங்க, எவ்ளோ எதிர்பார்த்தோம், சீசன் 3 வருமா என்றும்,மெளன ராகம் சீரியலை மிஸ் பண்ண போவதாகவும், புதிய புரொஜக்ட் உடன் மீண்டும் வரும்படி ரவினாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
சன் டிவியில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் ஒளிப்பரப்பான தங்கம் சீரியலில் சிறு வயது ரம்யாவாக நடித்தார் ரவீனா. தொடர்ந்து காரைக்கால் அம்மையார், ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியலில் நடித்தார்.
மேலும் ஜில்லா, ராட்சசன், தீரன் அதிகாரம் ஒன்று, பேய்கள் ஜாக்கிரதை, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட படங்களிலும் ரவீனா நடித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“