Advertisment

சிம்பிளான ஹெல்தி டின்னர்: கோதுமை ரவை கஞ்சி செய்வது எப்படி?

Wheat Rava Vegetables Kanji Tamil Video: சுவையான சத்தான கோதுமை ரவை கஞ்சி எப்படி செய்வது? எனப் பார்க்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சிம்பிளான ஹெல்தி டின்னர்: கோதுமை ரவை கஞ்சி செய்வது எப்படி?

Recipe News In Tamil, Wheat Rava Vegetables Kanji Tamil Video: குளிர் காலத்திற்கு ஏற்ற சத்தானதும், செரிமானத்திற்கு வசதியுமான ஒரு உணவுப் பொருள் கஞ்சி. அரிசி கஞ்சி மட்டுமல்ல... கோதுமை கஞ்சியும் உடலுக்கு நல்லது. கோதுமை ரவை, காய்கறிகளை இணைத்து கோதுமை ரவை கஞ்சியை சுவையாக செய்ய முடியும்.

Advertisment

கோதுமை ரவை கஞ்சியை சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். காய்கறிகள் சேர்வதால் தாதுக்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து கிடைக்கும். சுவையான சத்தான கோதுமை ரவை கஞ்சி எப்படி செய்வது? எனப் பார்க்கலாம்.

Wheat Rava Vegetables Kanji Tamil Video: கோதுமை ரவை கஞ்சி

கோதுமை ரவை கஞ்சி செய்யத் தேவையான பொருட்கள்: கோதுமை ரவை - 1 கிளாஸ், தேங்காய்ப்பால் - 1 கிளாஸ், பச்சை மிளகாய் - 2, நறுக்கிய கேரட், பீன்ஸ், பட்டாணி - 1 கிளாஸ், தண்ணீர், உப்பு - தேவையான அளவு, கொத்தமல்லி இலை - சிறிதளவு.

கோதுமை ரவை கஞ்சி செய்முறை :

ஒரு வாணலியில் கோதுமை ரவையை வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அதில் நறுக்கிய காய்கறிகளைப் போடுங்கள். கூடவே உப்பு, பச்சைமிளகாய் சேர்த்து வேகவிட வேண்டும்.

அரை வேக்காடு ஆனதும், அதில் தேங்காய்ப்பால், வறுத்த கோதுமை ரவை ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். நன்கு வெந்ததும், கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்க வேண்டும். இப்போது சுவையான சத்தான கோதுமை ரவை கஞ்சி ரெடி.

தேங்காய் துவையலை சைட் டிஷ்ஷாக வைத்துக் கொண்டு, கோதுமை ரவை கஞ்சியை சாப்பிட்டால் இன்னும் டேஸ்டியாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு இது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

 

 

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment