மனித மலக்கழிவுகளை உரமாக்கும் எகோசான் எனப்படும் சூழல் மேம்பாட்டு சுகாதார கழிப்பறைகள் பற்றி நீங்கள் கேள்விபட்டது உண்டா? ஏறக்குறைய 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்த கழிவறைகளை கட்டியதற்காக மத்திய அரசின் மிக உயரிய பத்ம ஸ்ரீ விருதை வென்றுள்ளார் திருச்சியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுப்புராமன்.
இதுதொடர்பாக DW Tamil யூடியூப் சேனலில் வெளியான வீடியோ!
திறந்தவெளியில் யாரும் மலம் கழிக்க கூடாது, ஒரு கிராம் மலத்துல ஒரு கோடி வைரஸ், பத்து லட்சம் பாக்டீரியா, ஆயிரம் ஒட்டுண்ணி, நூறு ஒட்டுண்ணி முட்டைகள் இருக்கு, இதெல்லாம் ஒரு கிராம் மலத்துல…
அதனால் கழிப்பறை ரொம்ப ரொம்ப முக்கியம், என்கிறார் சுப்புராமன்…
முசிறி கரையோர கிராமங்கள நான் கழிப்பறை கட்டியிருக்கேன். இது காவிரி ஆற்றோட டெல்டா பகுதி. விவசாயம் நடக்குற இடம். இங்க ஒரு அடி தோண்டுனாலே தண்ணி வந்துரும். இப்படி தண்ணி வந்தா அங்க சாதரண கழிப்பறை கட்ட முடியாது. அப்படி கட்டுணா அது வீணா போயிடும். அதனால நோய்வாய் படுறதுக்கு வாய்ப்பு இருக்கு. அந்த வாய்ப்பை குறைக்கத்தான் இந்த சூழல் மேம்பாட்டு சுகாதார கழிப்பறைகளை காவிரி கரையோரத்துல நிறைய கட்டியிருக்கேன்.
சூழல் மேம்பாட்டு சுகாதார கழிப்பறைகள் என்றால் என்ன?
இந்த கழிப்பறை தரைக்கு மேல கட்டப்படுது. இதுல ரெண்டு சேம்பர் இருக்கும். ஒரு சேம்பர் முதல்ல யூஸ் பண்ணுவோம். ஒவ்வொரு முறையும் மலம் கழித்த பிறகு சாம்பல், மரத்தூள், இல்ல மண் போட்டு மூடிட்டு கொஞ்சம் பின்னால நகர்ந்து உட்கார்ந்து கழுவணும்.
கழுவுற தண்ணீர் தனியா போயிடும், சிறுநீர் தனியா போயிடும். மூன்றும், மூன்று விதமாக தனிதனியா போயிடும்.
இந்தமாதிரி சூழ்நிலையில இது ஒரு வருஷத்துக்கு வரும். ஒருவருஷம் முடிஞ்ச பிறகு அடுத்த சேம்பர் யூஸ் பண்ணுவோம். இதை ஆறு மாசம் கழிச்சு பாக்கும்போது உள்ளே அந்த மலக்கழிவுகளை தெரியாது. எல்லாம் மக்கி எருவாகிடும்.
இது மலக்கழிவுகள்னு நம்ம சொன்னாதான் தெரியும்.
எந்த கிருமிகளும் இல்லாம சுத்தமா, ஆரோக்கியமா, தூய்மையா இருக்கக் கூடிய நல்லக் கழிவுகள், இன்னும் சொல்லப்போனா அது உரம்..
இந்த கழிவறையில வர்ற உரத்தை விவசாயிகள் வந்து எடுத்துட்டு போயி, அவுங்க வயல்ல தெளிச்சு விவசாயம் பண்றாங்க, என்கிறார் சுப்புராமன்.
இதேபோல இவரது முயற்சியால் மலக் கழிவுகளில் இருந்து உருவாக்கப்பட்ட பயோகேஸ் அடுப்புகள் தான் சமுதாய சமையலையில் பயன்படுத்தப்படுகின்றன.
முசிறியில டிஜென்ரலைஸ்டு வேஸ்ட்டு வாட்டர் ட்ரீட்மெண்ட் சிஸ்டம் சொல்ற இன்னொரு கழிவறை கட்டியிருக்கோம்.
இது சாதரண டாய்லெட் தான். அந்த டாய்லெட் கழிவுகள் எல்லாம் முதல்ல பயோகேஸ் பிளாண்டுக்கு போகும். இந்த எரிவாயு கலனுக்குள்ள போனதால மலக்கழிவுகள் எரிவாயுவாக வெளியே வரும். அதை சமைக்கிறதுக்கு பயன்படுத்துறாங்க…
இப்போ பயன்படுத்துற டாய்லெட்ல செப்டிக் டேங்க் பயன்படுத்துறாங்க.. அது எடுத்துக் கொண்டு போயி கொட்டுறதுக்கு இடமே கிடையாது. நம்ம வெளியே ஆத்துல, குளத்துல கொட்டி தண்ணியும் மாசுபடுது.
இந்த மாதிரி ஒரு சூழல்ல உலகம் முழுக்க கெட்டு போயிடும். அதை மாத்தி இந்த சூழல் மேம்பாட்டு சுகாதார கழிப்பறைகளை அமைக்கும் போது, பிரச்னைகளுக்கு எல்லாம் ஒரு தீர்வு கிடைக்கும் என்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.