ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி சேவைகளைத் தொடர்ந்து அந்நிறுவனம் மலிவு விலையில் பிராட்பேண்ட் சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளது. முதலில் இலவச 4ஜி சேவையின் மூலம் ஏராளமான மொபைல் நெட்வொர்க் வாடிக்கையாளர்களை தன்பக்கம் கவர்ந்திழுத்த ஜியோ, தற்போது அடுத்த நடவடிக்கையையாக ஃபைபர் பிராட்பேண்ட் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது. தீபாவளியையொட்டி இந்த ஃபைபர் பிராட்பேண்ட் சேவையை வழங்க ஜியோ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாயுள்ளது.
அதன்படி ரூ.500-க்கு 100ஜிபி டேட்டா வழங்க ஜியோ திட்டமிட்டுள்ளதாம். ஏற்னெனவே ஜியோ 4ஜி மொபைல் நெட்வொர்க் வருகையால் இந்தியாவில் உள்ள மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் தள்ளாடியது. தற்போது அடுத்த அதிரடியாக ஃபைபர் பிராட்பேண்ட் சேவையின் மூலமாக மீண்டும் சவால் விடத் தயாராகியுள்ளது ஜியோ.
ஏற்னெனவே சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சோதனை முறையில் சேவை அளிக்கத் தொடங்கிவிட்டது. ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் மூலம் குறைந்த விலையில் அதிக டேட்டா பெற முடியும் என்பதால், மற்ற பிராட்பேண்ட் நிறுவனங்களுக்கு இது ஒரு சிம்மசொப்பனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.