சின்னத்திரையின் பிரபலமான ஜோடி ரேஷ்மா முரளிதரன்- மதன் பாண்டியன்.
சமீபத்தில் முடிந்த விஜய் டிவியின் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 4 இல், ரேஷ்மாவும் மதன் பாண்டியனும் கலந்து கொண்டு, பட்டத்தை தட்டிச் சென்றனர்.
இந்நிலையில் மதன் பாண்டியன் ரேஷ்மாவுக்கு சர்ப்ரைஸ் டின்னர் பார்ட்டி கொடுத்துள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்களை ரேஷ்மா தன் இன்ஸ்டாவில் பகிர்ந்து கொண்டார். அதில், ”நான் எழுதுவதை விட, என் மகிழ்ச்சியை நீங்கள் இதில் பார்க்கவும், உணரவும் முடியும். இந்த அழகான எதிர்பாராத டின்னர் டேட் சர்ப்ரைஸுக்கு நன்றி மதன்பாண்டியன் .. டேட் யாருக்குத்தான் பிடிக்காது? இந்த இடத்தில்தான் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம், அதுதான் மிகவும் ஆச்சரியமான விஷயம் …. உங்களுக்கு நிறைய அன்பும் அரவணைப்புகளும்…” என்று ரேஷ்மா உணர்ச்சிப்பூர்வமாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அழகான புகைப்படங்கள்…








“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“