scorecardresearch

சைத்ரா சொன்ன குட் நியூஸ்.. ரெண்டு பேருல யாருக்கு?

இந்த 4 பேருக்குமே இப்போது திருமணம் ஆகிவிட்டது. இதனால் முன்பு போல இவர்களை அடிக்கடி ஒன்றாக பார்க்க முடிவதில்லை.

Chaitra Reddy
Chaitra Reddy

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீரியல்களை விட ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டது சீரியல் நடிகைகளின் நட்பு தான்.

சைத்ரா ரெட்டி, ரேஷ்மா முரளிதரன், ஷபானா, நக்ஷ்த்திரா இவர்களின் நட்பையும், சேட்டைகளையும் பார்த்து ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது. முக்கியமாக இந்த 4 பேருக்குமே இப்போது திருமணம் ஆகிவிட்டது. இதனால் முன்பு போல இவர்களை அடிக்கடி ஒன்றாக பார்க்க முடிவதில்லை.

சமீபத்தில் சைத்ரா, ’எங்கள் வாழ்க்கையின் சிறந்த நேரத்தை நாங்கள் அனுபவித்தோம்’ என்று ஷபானா, நக்ஷ்த்திரா மற்றும் ரேஷ்மா உடன் இருக்கும் ஒரு வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் சைத்ரா இன்ஸ்டா போஸ்ட் ஒன்று ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது.

நக்ஷ்த்திரா வயிற்றில் காது வைத்து கேட்பது போல இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த சைத்ரா அதில், எங்கள் 4 பேரில் யாருக்கு முதலில் குழந்தை பிறக்கும் என்று எப்போதும் யோசித்துக் கொண்டிருந்தோம். நக்ஷ்த்திரா கர்ப்பமாக இருக்கிறார் என்பது எங்கள் அனைவருக்கும் ஒரு பூரிப்பான செய்தி. என் சிறந்த தோழி தனது குழந்தையை வயிற்றில் சுமப்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,

மகிழ்ச்சி என்பது உங்கள் கர்ப்பிணி தோழியின் வயிற்றைத் தடவுவது. ஜூனியர் நக்ஷு வெளியே வந்து எங்களைச் சந்திப்பதற்காகக் காத்திருக்கிறேன் என்று சைத்ரா உருக்கமாக அதில் எழுதி உள்ளார்.

கேரளாவில் பிறந்த நக்ஷ்த்திரா, கிடா பூசாரி மகுடி என்ற படத்தில் நடித்து, தமிழ் திரையுலகில் அறிமுகமானார். ஆனால் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியல் தான், இவருக்கு மிகப்பெரிய அளவில் பெயரையும், புகழையும் தேடித் தந்தது. அதன் பிறகு நக்ஷ்த்திரா, கலர்ஸ் டிவியில் வள்ளி திருமணம் சீரியலில் ஹீரோயினாக நடித்தார். பிறகு, எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் விஷ்வா சாம் என்பவரை திடீரென திருமணம் செய்து கொண்டார்.

விஷ்வா ஒரு டாட்டூ ஆர்டிஸ்ட், மற்றும் ஜீ தமிழ் டி.வி. சீரியல்களின் எக்ஸிகியூட்டிவ் பிரொடியூசராகவும் உள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Reshma muralidharan nakshathra zee tamil chaitra reddy