முக்கியமான விஷயம் என்னவென்றால், சைத்ரா, ரேஷ்மா, ஷபானா, நக்ஷ்த்திரா 4 பேருமே திருமணம் செய்து கொண்டனர். அதனால் இப்போது இவர்கள் 4 பேரையும் ஒன்றாக பார்க்க முடியவில்லை,
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீரியல்களை விட ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டது சீரியல் நடிகைகளின் நட்பு தான்.
Advertisment
சைத்ரா ரெட்டி, ரேஷ்மா முரளிதரன், ஷபானா, நக்ஷ்த்திரா இவர்களின் நட்பையும், சேட்டைகளையும் பார்த்து ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது. அந்தளவுக்கு ஒருவருக்கொருவர் அணைத்துக் கொண்டு இருப்பார்கள்.
இவர்கள் நான்கு பேரும் சேர்ந்தாலே பார்ட்டி தான். பண்டிகையாக இருந்தாலும், பிறந்த நாளாக, திருமணமாக இருந்தாலும் எப்போதும் நான்கு பேரும் சேர்ந்துதான் இருப்பார்கள்.
சைத்ரா கல்யாணத்தின் போது இவர்கள் நான்கு பேரும் கடற்கரையில் எடுத்த ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் எல்லாமே பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது. தோழிகள் என்றால் இவர்களை போல இருக்க வேண்டும் என்று பலரும் கூறினர். இப்படி இவர்கள் 4 பேரும் சின்னத்திரையின் தோழிகளாக வலம் வந்தார்கள்.
ஆனால் இப்போது இந்த 4 பேருமே ஜீ தமிழ் டிவியில் இல்லை.
இப்போது சைத்ரா சன் டிவியின் கயல் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஷபானா செம்பருத்திக்கு பிறகு புதிதாக எந்த சீரியலிலும் நடிக்கவில்லை, ரேஷ்மாவும், மதனும் கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான அபி சீரியலில் ஜோடியாக நடித்தனர். சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் டிவியின் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டத்தை தட்டிச் சென்றனர். அதேபோல நக்ஷ்த்திராவும் கலர்ஸ் தமிழ் டிவியின் வள்ளி திருமணம் சீரியலில் நடித்தார்,
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், சைத்ரா, ரேஷ்மா, ஷபானா, நக்ஷ்த்திரா 4 பேருமே திருமணம் செய்து கொண்டனர். அதனால் இப்போது இவர்கள் 4 பேரையும் ஒன்றாக பார்க்க முடியவில்லை,
இந்நிலையில் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் விதத்தில் சைத்ரா, ’எங்கள் வாழ்க்கையின் சிறந்த நேரத்தை நாங்கள் அனுபவித்தோம்’ என்று தன்னுடைய இன்ஸ்டாகிராமில் தோழிகளுடன் இருக்கும் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், சைத்ரா, ஷபானா, நக்ஷ்த்திரா மற்றும் ரேஷ்மா உள்ளனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு 4 தோழிகளும் ஒன்றாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் பேபிஸ் ஆர் பேக், உங்க எல்லாரையும் ஒன்னா பாக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு, பெஸ்ட் ஃபிரெண்ட்ஸ் ஃபாரெவர் என்று விதவிதமாக கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“