Advertisment

பிசின் கலை கற்கும் குஷ்பு, சுஹாசினி, பூர்ணிமா. இது என்ன ஆர்ட்?

நகைகள், சிற்பங்கள், ஓவியங்கள் மற்றும் பிற அலங்கார பொருட்கள் அடிக்கடி எபோக்சி பிசின் மூலம் தயாரிக்கப்படுகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Khushbu sundar

Khushbu Sundar

கலைகள் கற்பதற்கு வயது ஒரு தடை கிடையாது. அப்படித் தான் குஷ்புவும் தன் சக தோழிகளான சுஹாசினி மணிரத்னம் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் உடன் ஒரு பட்டறையில் பிசின் கலையை (Resin art) ஆர்வத்துடன் கற்கும் ஒரு வீடியோ இப்போது இன்ஸ்டாவில் வைரல் ஆகியுள்ளது.

Advertisment

ஆர்டிஸ்ட் கவிதா ஆனந்த் நிர்வகிக்கும் tints.and.inks என்ற இன்ஸ்டா பக்கம் ’நேற்று எங்கள் ரெசின் கலைப் பட்டறையில் குஷ்பு, சுஹாசினி, பூர்ணிமாவின் பிரமிக்க வைக்கும் தலைசிறந்த படைப்புகளில் பணிபுரிந்தபோது எங்களுக்கு ஒரு அற்புதமான அனுபவம் கிடைத்தது’ என்று அந்த வீடியோவை பகிர்ந்தது.

பிசின் கலைஞரான மாதவி அடல்ஜாவின் உதவியுடன் இந்த குறிப்பிட்ட கலை குறித்து ஆராய நாங்கள் முடிவு செய்தோம்.

எபோக்சி பிசின் (epoxy resin) என்றால் என்ன?

அறை வெப்பநிலையில், பிசின் என்பது திரவமாக இருக்கும் சிந்தெட்டிக் பாலிமர் வகையாகும்; காற்றில் வெளிப்படும் போது, ​​அது கடினமாகிறது. நகைகள், சிற்பங்கள், ஓவியங்கள் மற்றும் பிற அலங்கார பொருட்கள் அடிக்கடி எபோக்சி பிசின் மூலம் தயாரிக்கப்படுகின்றன.

கவுண்டர்டாப், டேப்லெட் மற்றும் பிற மேற்பரப்புகளை உருவாக்குவது அதன் பிற நடைமுறை பயன்பாடுகளில் சில, என்று மாதவி விவரித்தார்.

எபோக்சி பிசின், பசை பயன்பாடுகளில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.

இது எபோக்சியின் வலுவான பண்புகளால், கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப பசைகளை சாத்தியமாக்குகிறது. எபோக்சி பிசின் பெரும்பாலும் இரண்டு பகுதி (two-part glue) பசை ஆகும், இது பழுதுபார்க்க பயன்படுத்தப்படலாம்.

சீலண்ட்ஸ் உருவாக்க அல்லது உடைந்த பொருட்களை ஒட்ட வைக்க இது அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.

இணைந்தவுடன், பிசின் கெட்டியாகி, ஒரு திடமான பிணைப்பை உருவாக்கும். எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் அமைப்புகள் எபோக்சி பிசினைப் பயன்படுத்துகின்றன, என்று மாதவி தெளிவுபடுத்தினார்.

பல கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு, பிசின் கலை ஒரு பிரபலமான தேர்வாகும்.

மற்ற பொருட்களிலிருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது?

மாதவியின் கூற்றுப்படி, பிசின் எதையும் செய்ய பயன்படுத்தப்படலாம், ஏனெனில் பிசின் ஃபுளோ ஆகும் மற்றும் தனித்துவமான வடிவங்களை உருவாக்குகிறது.

எபோக்சி பிசின் ஓவியங்கள் மற்றும் பிற கலைப் படைப்புகளுக்கு பளபளப்பான மேற்பரப்பை வழங்குகிறது, அதே நேரத்தில் சாயல்களை மேம்படுத்துகிறது.

ஓவியர்கள் மற்றும் கைவினைஞர்கள் தங்கள் கலைப் படைப்புகளுக்கு கூடுதல் வண்ணத்தையும் பிரகாசத்தையும் சேர்க்க விரும்பும் பிசின் பெருகிய முறையில் பிரபலமாக உள்ளது.

ரெசின் என்பது வழக்கமான வண்ணப்பூச்சுகளுக்கு ஒரு சிறந்த மாற்றாகும், மேலும் இது கேன்வாஸில் ஸ்டேட்மென்ட் பீஸ் உருவாக்க அல்லது மர ஃபரினிட்சர்களை பாதுகாக்கப் பயன்படுகிறது. இதனால், அதன் ஈர்ப்பு உலகம் முழுவதும் பரவி வருகிறது,  என்றார் மாதவி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment