தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிரம்பிய அரிசி நீர், ’சிறுநீரகத் தொற்று, வெள்ளைப்படுதல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் போன்றவற்றுக்கு ஒரு அற்புதமான தீர்வு’ என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஆயுர்வேதத்தில் தண்டுலோடகா (Tandulodaka) என்று அழைக்கப்படும் அரிசி நீர், மாவுச்சத்து நிறைந்தது. மேலும் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் பல்வேறு முக்கியமான ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டுள்ளது. நாள் முழுவதும் அரிசி நீர் பருகுவது உடலுக்கு மிகவும் நல்லது.
வெள்ளைப்படுதலால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நோயாளிக்கும் இதை நான் பரிந்துரைக்கிறேன். இது அற்புதமான முடிவுகளைத் தருகிறது, என்று ஆயுர்வேத மருத்துவர் டிக்ஸா பாவ்சர் சவாலியா கூறுகிறார்.
அரிசி நீர் இயற்கையில் குளிர்ச்சியானது, இதன் மூலம் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உணர்வு, வயிற்றுப்போக்கு, ரத்தப்போக்கு கோளாறுகள் மற்றும் அதிக மாதவிடாய் ஆகியவற்றிற்கு உதவுகிறது. மேலும், உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்களில் எரிச்சல் உணர்வைக் குறைக்கிறது. இருப்பினும், இருமல் மற்றும் சளியால் பாதிக்கப்படுபவர்கள் அதைத் தவிர்க்க வேண்டும் என்று டிக்சா பரிந்துரைத்தார்.

அரிசி நீரின் அஸ்ட்ரிஜென்ட் பண்பு உடலில் இருந்து திரவ ஓட்டத்தை குறைக்கிறது, மேலும் வெள்ளை வெளியேற்றத்துடன் சில கால்சியம், தாதுக்கள் போன்றவை உடலில் இருந்து வெளியேற்றப்படுகின்றன. எனவே, அரிசி நீர், கருப்பையில் இருந்து வெளியேற்றத்தைத் தடுக்கும் ஒரு முகவராக செயல்படுகிறது.
இந்த நன்மைகளைத் தவிர, அரிசி நீரில் பல தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை சருமத்திற்கு அதிசயங்களைச் செய்கின்றன.
மருத்துவர் டிக்சாவின் கூற்றுப்படி, இது உயிரணு வளர்ச்சியை ஊக்குவிக்கும், வயதான செயல்முறையை தாமதப்படுத்தும் மற்றும் ரத்த ஓட்டத்தைத் தூண்டும் இனோசிட்டால் என்ற கலவையைக் கொண்டுள்ளது.
அரிசி தண்ணீர் தயாரிப்பது எப்படி?
10 கிராம் அரிசியை எடுத்து ஒரு முறை கழுவவும். இப்போது அதனுடன் 60- 80 மில்லி தண்ணீரைச் சேர்த்து மூடிய மண் பானை / ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கிண்ணத்தில் 2-6 மணி நேரம் வைக்கவும். பின்னர் அரிசியை, அதே தண்ணீரில் 2 – 3 நிமிடங்கள் மசிக்கவும். இப்போது வடிகட்டவும். அது பயன்படுத்த தயாராக உள்ளது.
எந்த அரிசியில் செய்யலாம்?
எந்த அரிசியைப் பயன்படுத்தினாலும் நல்லது. உடைத்த அரிசியும் நன்றாக இருக்கும். இருப்பினும், சிவப்பு அரிசி சிறந்தது மற்றும் ஒரு வருடம் பழமையான அரிசி மிகவும் நல்லது. வெள்ளை அரிசியையும் பயன்படுத்தலாம். பச்சை அரிசி, பாலிஷ் செய்யாமல், வேகவைக்காமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“