scorecardresearch

5 வருடத்திற்கு முன்பு ஆங்கராக; இன்று ஹீரோவாக – வாழ்க்கை எத்தனை சுவாரஸ்யமானது!!

ரியோ என்றால் இல்லத்தரசிகளுக்கு நினைவுக்கு வருவது ‘ஓ… அந்த சரவணன் மீனாட்சி பையனா’ என்பதே… விஜே, சரவணன் மீனாட்சி சீசனின் மோஸ்ட் வெல்கம்ட் ஹீரோ, காதல் கணவன், பிக் ஸ்க்ரீன் ஹீரோ என்று வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் போராடி முன்னேறி இருப்பவர் ரியோ ராஜ். லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்: சாதனைப் படைத்த ரஜினி, விஜய் பட எடிட்டர்! ஜஸ்ட் அப்படியே வந்துட்டேன் என்பது போல் அல்ல இவரது வளர்ச்சி.. ரியோவின் அப்பா டிரைவர். அம்மா டெய்லர். […]

rio raj plan panni pannanum
rio raj plan panni pannanum

ரியோ என்றால் இல்லத்தரசிகளுக்கு நினைவுக்கு வருவது ‘ஓ… அந்த சரவணன் மீனாட்சி பையனா’ என்பதே…

விஜே, சரவணன் மீனாட்சி சீசனின் மோஸ்ட் வெல்கம்ட் ஹீரோ, காதல் கணவன், பிக் ஸ்க்ரீன் ஹீரோ என்று வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் போராடி முன்னேறி இருப்பவர் ரியோ ராஜ்.

லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்: சாதனைப் படைத்த ரஜினி, விஜய் பட எடிட்டர்!

ஜஸ்ட் அப்படியே வந்துட்டேன் என்பது போல் அல்ல இவரது வளர்ச்சி..

ரியோவின் அப்பா டிரைவர். அம்மா டெய்லர். குடும்ப சூழலால் அவரது தம்பியும் அம்மாகூடவே வேலைக்குப் போக, அப்போது குடும்பத்தில் பணத்துக்கு ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழலில் வளர்ந்து, இன்று விஜே-வாகி நட்புக்களின் உதவியுடன் தன் விடா முயற்சியால் ஹீரோவாகவும் முன்னேறி இருக்கிறார்.


5 வருடங்களுக்கு முன்பு, 2015ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த காக்கிச்சட்டை படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சிவா, அனிருத் ஆகியோரை ரியோ பேட்டி எடுத்தார். அதே சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் ஹீரோவாக அறிமுகம் செய்யப்பட்டார் ரியோ.

இதனை, ரியோ தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று பகிர்ந்துள்ளார்.

வாழ்க்கை எத்தனை அழகானது, எத்தனை சுவாரஸ்யமானது, எத்தனை சஸ்பென்ஸ் கொண்டது என்பது ரியோ ராஜ் வாழ்க்கையின் மூலம் மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது என்றால் அது மிகையல்ல.

தற்போது, பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ‘பிளான் பண்ணி பண்ணனும்’ என்ற படத்தில் ரியோ நடித்துள்ளது குறிப்படத்தக்கது.

ஆல் தி பெஸ்ட் ப்ரோ!!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Rio raj plan panni pannanum