Advertisment

தாவணி, சல்வார், புடவை எப்படி பார்த்தாலும் அழகுதான்! ரோஷினி கியூட் கிளிக்ஸ்

ரோஷினி ஹரிப்பிரியன் அடிப்படையில் ஒரு மாடல். அதிலிருந்து தான் அவருக்கு சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

author-image
abhisudha
Oct 27, 2022 14:03 IST
roshini haripriyan

Roshini haripriyan

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடர் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து இல்லத்தரசிகள், இளம்பெண்கள், குழந்தைகள் என அனைவரின் விருப்பமான தொடராக உள்ளது. இது ‘கிருஷ்ணகோலி’ என்ற பெங்காலி சீரியலின் தழுவலாகும்.

Advertisment

பாரதி கண்ணம்மா சீரியலில், அருண் பிரசாத், ஃபரினா ஆசாத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த சீரியலுக்கு பிறகு கண்ணம்மாவாக நடித்த ரோஷினிக்கு ஏராளமான ரசிகர்கள் வரத் தொடங்கினர். அதனாலேயே பாரதி கண்ணம்மா சீரியல், எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருந்தது.

அதில் கண்ணம்மாவாக நடித்து அனைவரின் இதயங்களையும் கட்டிப்போட்ட ரோஷினி திடீரென சீரியலில் இருந்து விலகினார். பிறகு, ரோஷினி குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில், 10 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். ஆனால் அதில் வெற்றி பெறாமல், பாதியிலே நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

ரோஷினி ஹரிப்பிரியன் அடிப்படையில் ஒரு மாடல். அதிலிருந்து தான் அவருக்கு சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. மாடர்ன் டிரெஸ், புடவை என விதவிதமாக உடையணிந்து எடுத்த போட்டோஷூட்களை தனது இன்ஸ்டாகிராமில் அடிக்கடி பதிவிடுவார்.

அப்படி ரோஷினி பகிர்ந்த போட்டோஸ் இங்கே..

publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

அதேபோல வெள்ளை பெட்ஷீட், கூலிங் கிளாஸ் என பேய் வேஷம் போட்டு அவர் பகிர்ந்த வீடியோ அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. அதைப் பார்த்த ரசிகர்கள் கியூட் பேய் என அவரை பாராட்டி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment