விடிய விடிய வாகனம் ஓட்டுபவர்களுக்கு தேநீர் கொடுக்கும் காவல் துறை… விபத்துகளை தடுக்க புதிய ஐடியா…

சோர்வாக உணரும் ஓட்டுநர்கள் கனரக வாகனங்களை ஓரமாக நிறுத்திவிட்டு ஓய்வெடுக்கும் படி அறிவுரை

By: Updated: December 1, 2018, 03:16:14 PM

தேநீர் தரும் காவல் துறை : சேலம் – பல முக்கிய ஊர்களையும், நகரங்களையும் ஒன்றிணைக்கும் முக்கியப் புள்ளி. கோவை,திருப்பூர், நாமக்கல், மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து சென்னை செல்ல விரும்புபவர்களுக்கும் பெங்களூரு செல்ல விரும்புபவர்களுக்கும் முக்கியமான பாதையாக இருக்கிறது சேலம் தேசிய நெடுஞ்சாலை.

கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பெங்களூர் செல்வதற்கு சேலம் மார்க்கத்தினையே அதிகம் பயன்படுத்துவது வழக்கம். இப்பகுதியில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் சரக்கு லாரிகளும் மிக அதிகம். பொதுவாக சரக்கு லாரிகளை இரவு நேரங்களில் இயக்கிக் கொண்டு செல்லும் ஓட்டுநர்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது வழக்கம்.

தேநீர் தரும் காவல் துறை – விபத்துகளைத் தடுக்க புதிய ஐடியா

கடந்த வருடம் மட்டும் சேலம் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 800 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த வருடம் நவம்பர் வரை சுமார் 425 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.  சேலம் போக்குவரத்து எல்லைக்கு உட்பட்ட தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் நடக்கும் சாலை விபத்துகளை தடுக்க போக்குவரத்து காவல் துறை எவ்வளவோ முயற்சி மேற்கொண்டும் பயன் அளிக்கவில்லை.

விபத்துகளை தடுக்கும் பொருட்டு, இரவு நேரங்களில் சரக்கு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு தேநீர் தரச் சொல்லி போக்குவரத்து காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் இருந்து கரிப்பட்டி போன்ற அதிகமாக விபத்து ஏற்படும் பகுதிகளில் போக்குவரத்து காவல் துறையினர், ட்ரைவர்களுக்கு டீ வழங்கி வருகின்றனர். மேலும் சோர்வாக உணரும் ஓட்டுநர்கள் கனரக வாகனங்களை ஓரமாக நிறுத்திவிட்டு ஓய்வெடுக்கும் படி அறிவுரைகளும் வழங்கினார்கள்.

மேலும் படிக்க: வீடியோ : பதற வைத்த இறுதி நொடிகள்… திடீரென உடைந்த சாலைக்குள் விழுந்த பெண்கள்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Salem police provides tea to the heavy truck drivers to avoid road mishaps

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X