சரஸ்வதி பூஜை 2025: அழகிய வண்ணக் கோலங்கள்; உங்க வீட்டில் இப்படி போடுங்க மக்களே!

நாளை மற்றும் நாளை மறுநாள் சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜையையொட்டி வீட்டில் என்ன கோலம் போடுவது என்று யோசித்துக்கு கொண்டு இருக்கிறீர்களா? அப்போ இதை ட்ரை பண்ணுங்கள்.

நாளை மற்றும் நாளை மறுநாள் சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜையையொட்டி வீட்டில் என்ன கோலம் போடுவது என்று யோசித்துக்கு கொண்டு இருக்கிறீர்களா? அப்போ இதை ட்ரை பண்ணுங்கள்.

author-image
Kalaiyarasi Sundharam
New Update
saraswathi poojai

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை ஆகியன கொண்டாட்டத்தின் உச்சத்தை எட்டும் நவராத்திரியின் முக்கிய நாட்கள். ஞானம், கல்வி, கலை ஆகியவற்றின் தெய்வமான அன்னை சரஸ்வதியை வரவேற்கும் இந்த நாளில், நம் வீடுகளை தூய்மையாக்கி, அலங்கரிப்பது மரபு. இந்த அலங்காரத்தில், வண்ணக் கோலங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கோலம் என்பது வெறும் வடிவமைப்பு அல்ல; அது நேர்மறை ஆற்றலையும், அழகையும் ஈர்க்கும் ஒரு கலை. இந்த 2025 சரஸ்வதி பூஜை அன்று, உங்கள் இல்லத்தின் வாயிலிலும், பூஜையறையிலும் சில அழகான வண்ணக் கோலங்களை முயற்சிக்கலாம்.

Advertisment

 சரஸ்வதி பூஜையன்று, புத்தகங்களை வைத்துப் பூஜை செய்யும் இடத்தில், ஒரு சிறிய பலகையில் அல்லது தரையில் ஓவியம், இசை அல்லது கல்விக்கு தொடர்பான வடிவங்களை வரைந்து, அவற்றை வண்ணப் பொடிகளால் நிரப்புங்கள். இது அன்னை சரஸ்வதியின் ஆசிகளைப் பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை. இப்போது சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜையன்று போடப்படும் கோலங்கள் சிலவற்றை பார்க்கலாம்.

2 aayudha

இந்த இரண்டு பூஜைகளும் நவராத்திரி பண்டிகையின் முக்கிய அங்கங்களாக கொண்டாடப்படுகின்றன. 

சரஸ்வதி பூஜை (மகாநவமி): சரஸ்வதி தேவி கல்வி, ஞானம், கலைகள் மற்றும் இசையின் தெய்வம். இந்த நாளில், மாணவர்கள் மற்றும் கலைஞர்கள் தங்கள் புத்தகங்கள், இசைக்கருவிகள், ஓவியப் பொருட்கள் ஆகியவற்றை அம்மனின் முன் வைத்து வழிபடுவார்கள். ஞானத்தையும், நல்ல புத்தியையும் வேண்டி சரஸ்வதி தேவியை வழிபடுவது மரபு. பெரும்பாலும் நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் இது அனுசரிக்கப்படுகிறது.

Advertisment
Advertisements

saraswathi poojai

ஆயுத பூஜை: ஆயுத பூஜை, குறிப்பாக தமிழகத்தில், தொழிலுக்கும், வாழ்க்கைக்கு ஆதாரமான கருவிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், மக்கள் தங்கள் தொழில் சார்ந்த கருவிகள், இயந்திரங்கள், வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை சுத்தப்படுத்தி, அவற்றிற்கு சந்தனம், குங்குமம் வைத்து, பூக்கள் சூட்டி வழிபடுகிறார்கள்.

இந்தக் கருவிகள் தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டித் தருவதால், அவற்றைப் புனிதமாக மதித்து, சக்திக்குரிய தெய்வமாகிய துர்கா தேவியை வணங்குவது இதன் நோக்கம். ஆயுத பூஜை சரஸ்வதி பூஜையுடன் இணைந்தோ அல்லது அதற்கு முன்னரோ கொண்டாடப்படுவது வழக்கம். இந்த இரண்டு பூஜைகளும் மனித வாழ்க்கைக்கு அவசியமான அறிவையும் (சரஸ்வதி), வளத்தையும் (ஆயுதங்கள்) அருளியதற்காக நன்றி தெரிவிக்கும் ஒரு பாரம்பரியமாகும்.

Rangoli

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: