90களில் முன்னணி நடிகராக இருந்தவர் சரத்குமார். விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான வாரிசு படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டையர் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
தற்போது 888 புரடக்ஷன் செல்லுலாய்டு கிரியேஷன்ஸ் தயாரிப்பில் மலையாளத்தில் தேசிய விருது பெற்ற இயக்குநர் மாதவ் ராமதாசன் இயக்கத்தில் சரத்குமார் நடிக்கிறார்.
இந்நிலையில், லிட்டில் டாக்ஸ் யூடியூப் சேனலில் சரத்குமார் ஹவுஸ் டூர் வீடியோ தான் இப்போது வைரல் ஆகியுள்ளது. அந்த வீடியோவில் சரத்குமார் தன்னுடைய வீடு, குடும்பம், தொழில் குறித்து பல விஷயங்களை மனம் திறந்து பகிர்ந்து கொண்டார்.
இருக்கிற இடத்தை சுத்தமா வச்சுட்டு வாழ்ந்தாலே அது அழகான வீடுதான். குடும்பத்தோட இருந்தா தான் அந்த வீடு முழுமையாகும். உழைப்பு ஒருபக்கம் இருந்தாலும், இதெல்லாம் ரசிகர்கள் எனக்கு கொடுத்தது என்று வீட்டுக்குள் செல்கிறார்.
உள்ளே போனதும் பெரிய ஹால், உள்ளே அப்பா, அம்மா போட்டோ. அப்பா ராமநாதன், ஆல் இந்தியா ரேடியோல வேலை பாத்தவரு. செய்திகள் வாசிப்பது ராமநாதன் என்ற கணீர் குரலுக்கு சொந்தமானவரு. வீட்டுக்குள்ளே ஆஃபிஸ், லைப்ரரி எல்லாம் இருக்கு. என்னதான் சமத்துவம் கொள்கையா இருந்தாலும், எனக்கு அதிகமா இறை நம்பிக்கை உண்டு. என் வீட்டுல வேல் கம்பு, குரான், என் பர்ஸ்ல லூர்து மாதா வச்சுருக்கேன். என் அப்பாவுக்கு கடவுள் நம்பிக்கை இல்ல, ஆனா என் அம்மா சாமி கும்பிடும் போது ஒன்னும் சொல்லமாட்டாங்க என்று ஒவ்வொரு அறையாக சரத் சுற்றி காண்பிக்கிறார்.
பிறகு டைனிங், உள்ளே போனதும் அவருக்கு மிக பிடித்த ரூம் இருந்தது, அதுதான் சரத்குமார் அம்மா இறுதிவரை வாழ்ந்த ரூம். அங்கு அவரின் அம்மா அணிந்த கண்ணாடி நகைகளை, அவரின் நியாபகமாக போட்டோ போல ஃபிரேம் செய்து மாட்டி வைத்திருக்கிறார்.
இந்த கண்ணாடி பாக்கும் போது என் அம்மா என்னை பாத்துட்டு இருக்க மாதிரியே உணர்வு இருக்கும். எப்பவாது மனசு சரியில்லன்னா இங்கதான் வந்து இருப்பேன். நான் சம்பாதிச்சு முதன்முதல்ல 10 லட்ச ரூபாய்க்கு இந்த இடத்தை வாங்கினேன். அப்புறம் கிணறு வெட்டினேன். அப்புறம் நடிச்சுட்டே, இந்த வீடு கட்டுனேன் என பல விஷயங்களை சரத்குமார் அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.
சரத் குமார் லிட்டில் டாக்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அந்த வீடியோ
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“