500 ரூபாய் புடவை வாங்கினாலும் அது நேர்த்தியா அவுங்க ஃபிட்க்கு ஏத்தமாதிரி கட்டுனா அது லட்ச ரூபாய் புடவை மாதிரி இருக்கும்., ஆனா லட்ச ரூபாய் புடவையா இருந்தாலும் அதை சரியா கட்டலனா, அது பாக்கிறதுக்கு நார்மல் புடவை மாதிரிதான் தெரியும்.
இப்போ ஃபீல்டுல Saree Drapistனு ஒரு பெரிய கடல் மாதிரி பிஸ்னஸ் இருக்குது என்கிறார் புடவை கட்டும் நிபுணர் சுதா ராஜேஷ்.
DW Tamil யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் சுதா ராஜேஷ் Saree Drapist தொழில் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில், விருதுநகர் தான் என்னோட பூர்விகம், பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில தான். ஒரு 7 வருஷமா நான் மீடியாவுல இருக்கேன். நான் ஒரு செய்தி வாசிப்பாளர்.
முன்னாடி எல்லாம் எனக்கு புடவை கட்டுறது பெரிய போராட்டமா இருந்தது. அப்புறம் பார்ட்டி, கல்யாணம், ஃபங்ஷன் போகும்போது ஒவ்வொருத்தர் கட்டியிருக்க புடவைய பாக்கும்போது, அது இன்னும் அழகா கட்டி இருக்கலாம்ல ஆசை வர ஆரம்பிச்சது.
என்னோட ஃபிரெண்ட்ஸ் வீடு, ரிலேஷன்ஸ் வீட்டுக்கு போகும் போது நான் கட்டிவிட ஆரம்பிச்சேன். அப்போதான் இதையே இரு பிரொஃபஷனால பண்ணலான்னு யோசிச்சேன். இது ஒரு பெரிய தொழில், ஆனா நிறைய பேருக்கு தெரியல.
புடவை கட்டுறதுலேயே நாங்க விதவிதமா கிரியேட் பண்ண ஆரம்பிச்சோம். அது எனக்கு ரொம்ப ரிசல்ட் கொடுத்தது. இந்த பயிற்சியில யாரு வேணா சேரலாம், இது ஒரு முக்கிய தொழிலாளாவும் எடுக்கலாம். முயற்சி, பயிற்சி இந்த ரெண்டும் இருந்தா மட்டும் போதும்.
புடவை கட்டும் போது ஒருத்தங்க உடலோட நம்ம இண்ட்ரெக்ட் ஆகுறோம். அவுங்களே டச் பண்ணிதான் வேலை செய்ய போறோம். அதுக்கு முன்னாடி, அவுங்களுக்கும், நமக்கும் ஒரு பாண்டிங் இருக்கணும். அப்படி இருந்தா மட்டும் தான் அந்த புடவை அழகா வரும்.
எடுத்த உடனே காசு சம்பாதிக்கலாம் எண்ணத்தோட இந்த புரோஃபஷனல்ல வராதீங்க, நீங்க முதல்ல லுக் கொண்டு வாங்க, கிரியேட் பண்ணுங்க, உங்களை நாலு பேருக்கு தெரியுறமாதிரி பண்ணுங்க.. அப்புறம் தானாவே உங்ககிட்ட காசு வந்துசேரும்.
நீங்க 200 ரூபாயும் வாங்கமுடியும், 5000 ரூபாயும் சம்பாதிக்கலாம். அதுக்கான ஸ்கில்ல நீங்கதான் வளத்துக்கணும்.
Saree Drapistல இன்னும் நிறைய இருக்கு. வளைகாப்பு, ஹல்தி அப்போ பொண்ணுங்க அவுங்க புடவைய பிரி பிளிட்ஸ் பண்ணா போதும் சொல்லுவாங்க, அதுக்கு 500- 1000 ரூபாய் வரை ரேட் ஃபிக்ஸ் பண்ணுங்க. ஒரு 5 புடவை வரும். வீட்டுல பிரி பிளிட்ஸ் பண்ணி, அதுக்கு ஒரு கவர் வாங்கி அதுல புடவை வச்சு போஸ்டல் பண்ணிடுங்க. இப்போ இது ரொம்ப டிரெண்ட் ஆயிட்டு வருது. ஆண்களும் இந்த தொழில்ல வரலாம்.
சோஷியல் மீடியாவுல அப்டேட்டா இருந்தா மட்டும்தான் இந்த ஃபீல்ட்ல நீங்க சர்வைவ் பண்ண முடியும்.
இதுல வர்ற வருமானமே உங்களுக்கு போதும், நீங்க அப்பாகிட்ட இல்ல உங்க கணவர்கிட்ட போய் கேட்கணும் அவசியம் இல்ல. உங்களோட சொந்த காசுல நீங்க எல்லாம் பண்ணலாம். கிடைக்கிற ஃபிரெண்ட்ஸ்கிட்ட நம்பர் கொடுங்க. ஷேர் பண்ணுங்க. வாட்ஸ் ஆப்ல போஸ்ட் போடுங்க. இதெல்லாம் பண்ணாம் உங்களோட காண்டெக்ட்ஸ் விரியும். உங்களுக்கு தன்னால கிளையண்ட்ஸ் ஆர்டர் வரும்.
நம்மள அழகா காண்பிக்கணும் ஆசை இருக்கிற வரைக்கும், இந்த ஃபீல்ட் எப்போதுமே ஜெயிக்கும் என்று முடிக்கிறார் சுதா ராஜேஷ்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.