சவுதி அரேபியாவில் "வெஸ்டர்ன் ஸ்டைல் பீச்"... பெண்கள் பிடித்த உடைகள் அணியலாம்!

சிகப்பு கடல் ரிசார்ட் என்ற பகுதியை உருவாக்க சவுதி அரேபிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு, கடற்பரப்பையொட்டியுள்ள 125 மைல் பகுதி ஒதுக்கப்படவுள்ளதாம்

சவுதி அரேபியாவில் உள்ள வடமேற்கு கடற்பகுதியை சுற்றுலா தளமாக்கும் வகையில் அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இஸ்லாமிய கொள்கைகளை தீவிரமாக பின்பற்றிவரும் நாடுகளில் முக்கியயமானது சவுதி அரேபியா. இந்த நிலையில், அந்த விதிமுறைகளை குறிப்பிட்ட இந்த பகுதிக்கு மட்டும் தளர்த்த திட்டமிட்டுள்ளது அந்நாட்டு அரசு.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், சிகப்பு கடல் ரிசார்ட் என்ற பகுதியை உருவாக்க சவுதி அரேபிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு, கடற்பரப்பையொட்டியுள்ள 125 மைல் பகுதி ஒதுக்கப்படவுள்ளதாம். சர்வதேச சட்டங்களுக்கு இணையான முறையில் அங்கு சட்டதிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுமாம். எனவே, பெண்கள் தாங்கள் விரும்பும் உடையணிந்து கொள்ளமுடியும். குறிப்பாக, சவுதி அரேபியாவில், கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் இனி பிகினி கூட அணிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

saudi

தற்போதைய நிலையில், இங்கிலாந்து சுற்றுலா பயணிகள் கோடைகால சுற்றுலாவாக துபாய்க்கு பயணம் மேற்கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அங்குள்ள, கடற்கரைகளில் சுற்றுலா பயணிகள் தங்களுக்கு பிடித்தமான உடைகளை அணிந்து கொள்ளும் சுதந்திரம் உள்ளது.

இந்த நிலையில், சிகப்பு கடல் திட்டம்(The Red Sea project) பகுதியில் டைவிங், ஆடம்பர ஹோட்டல், தீவுகள் ஆகிவவையும் உருவாக்க திட்டமிட்டுளளது சவுதி அரேபிய அரசு.

×Close
×Close