Advertisment

கருகிய பாத்திரம் சுத்தம் செய்ய பேக்கிங் சோடா; செஃப் வீடியோ

இது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், அலுமினியம் மற்றும் இரும்பு பாத்திரங்களை நன்றாக சுத்தம் செய்கிறது.

author-image
abhisudha
New Update
lifestyle

Scorched pan cleaning tips

சமையல் என்பது பொதுவாக பலருக்கும் பிடிக்காத ஒன்று. எனவே, சமையலறையில் அதிக நேரம் செலவழிக்காமல் முடிந்தவரை சீக்கிரம் சமைக்கவும், சமையல் தொந்தரவு இல்லாததாகவும் இருக்க பலர் விரும்புகிறார்கள்.

Advertisment

ஆனால் சமையலறையில் கறைகளைப் போக்குவது பெரிய தலைவலியாக இருக்கிறது.

செஃப் நேஹா தீபக் ஷா பரிந்துரைத்த ஹேக்ஸ் இதோ!

என்னை போலவே நிறைய சமைத்த பிறகு, உங்கள் பாத்திரங்களை நிறைய சுத்தம் செய்ய வேண்டியிருக்கும். வீட்டில் எளிதாகக் கிடைக்கும் அனைத்தையும் பயன்படுத்துங்கள்!

என்ன தேவை?

பேக்கிங் சோடா

வினிகர்

துணி துவைக்கும் சோப்பு

எப்படி செய்வது?

எரிந்த கடாயை நனைத்து, சிறிது பேக்கிங் சோடாவை தூவவும். அதை 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு, வெள்ளை வினிகரை தெளிக்கவும். அதை 30-40 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். இப்போது மெட்டல் ஸ்க்ரப் பயன்படுத்தி கழுவவும்.

இது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், அலுமினியம் மற்றும் இரும்பு பாத்திரங்களை நன்றாக சுத்தம் செய்கிறது. பேக்கிங் சோடா மற்றும் வினிகர் ஆகியவை கடாயில் இருந்து அனைத்து கார்பன் படிவுகளையும் அகற்றும்.

இது எப்படி வேலை செய்கிறது?

பேக்கிங் சோடா துர்நாற்றத்தை நீக்கவும், சுத்தம் செய்யவும் உதவுகிறது. இயற்கையில் அமிலத்தன்மை கொண்ட வினிகர், ப்ளீச் உள்ளிட்ட பிரபலமான கிளீனர்களுக்கு பதிலான ஒரு பயனுள்ள, நச்சுத்தன்மையற்ற மாற்றாகும். இது வாசனையை நீக்குகிறது, கறை மற்றும் துருவை அகற்ற உதவுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment