கடலுக்குள் சிறுமியை இழுத்துச் சென்ற கடல் சிங்கம்! அதிர்ச்சி வீடியோ!

அப்போது, திடீரென நீருக்குள் நீந்திக் கொண்டிருந்த கடல் சிங்கம் ஒன்று.....

கனடாவின் ரிச்மாண்ட் நகரில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தில், நீரில் நீந்திக் கொண்டிருந்த கடல் சிங்கத்தை பார்வையாளர்கள் ரசித்துக் கொண்டிருந்தனர்.  அங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுமி, துறைமுகத்தில் உள்ள தடுப்புச் சுவரில் அமர்ந்து கடல் சிங்கத்தை பார்வையிட்டார். அப்போது, திடீரென நீருக்குள் நீந்திக் கொண்டிருந்த கடல் சிங்கம் ஒன்று, அச்சிறுமியின் ஆடையை பிடித்து கடலுக்குள் இழுத்துச் சென்றது.

இதையடுத்து, அங்கிருந்த ஒருவர் சிறிதும் தாமதிக்காமல் கடலுக்குள் குதித்து சிறுமியைக் காப்பாற்றினார். இந்தக் காட்சியை அங்கிருந்து மற்றொருவர் படம்பிடித்து, இணையத்தில் அப்லோட் செய்ய, தற்போது அந்த வீடியோ வைரலாகியுள்ளது.

×Close
×Close