Advertisment

கருப்பு நிற முடிக்காக கறிவேப்பிலை ஜூஸ் அதிகமா சாப்பிட்டேன்: ஹிமா பிந்து ஹேர் கேர் டிப்ஸ்

பொடுகு தொல்லைக்கு, எலுமிச்சையும், தயிரும் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால், அது சரியாகிடும்.

author-image
abhisudha
புதுப்பிக்கப்பட்டது
New Update
Hima Bindhu Instagram

Hima Bindhu Instagram

கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே சீரியலில், சகானா’வாக நடித்து பிரபலமானவர் ஹிமா பிந்து. இப்போது சன் டிவியின் இலக்கியா சீரியலில் நடித்து வருகிறார்.

Advertisment

ஹிமா பிந்து ஒருமுறை ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தனது அழகு பராமரிப்பு குறித்து பகிர்ந்து கொண்டார்.

முடி பராமரிப்பு பொறுத்தவரைக்கும், அம்மாவுக்கு தெரிஞ்ச ஒருத்தங்க, எல்லா பொருட்களையும் சேர்த்து, ஒரு எண்ணெய் தயார் பண்ணுவாங்க.. அதுதான் நைட் நேரம் கிடைக்கும் போது மிதமா சூடாக்கி தலையில மசாஜ் பண்ணிட்டு, காலையில எழுந்ததும் தலைக்கு குளிப்பேன். இதை அடிக்கடி பண்ணாலே முடி கொஞ்சம் மிருதுவாக இருக்கும். முடி கொட்டுறது குறையும்.

நெய் வைக்கலாம். நெய் வைக்கும் போது முடி இன்னும் பிரகாசமா மாறும். பொடுகு தொல்லைக்கு, எலுமிச்சையும், தயிரும் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் சரியாகிடும். முடி வளரதுக்காக ஆரஞ்சு, கேரட் ஜூஸ் குடிப்பேன். கருப்பு நிற முடிக்காக, கறிவேப்பிலை ஜூஸ் அதிகமா சாப்பிட்டேன்.

டயட் பொறுத்தவரைக்கும், காலையில், 2-3 முட்டை சாப்பிடுவேன். அம்மா ஜூஸ் கொடுத்து அனுப்புவாங்க. இல்லன்னா இட்லி சாப்பிடுவேன். அதிகம் சாப்பிட மாட்டேன், வயிற்றுக்கு எவ்ளோ போகுதோ அவ்ளோதான்.

இரவு, பாதாம், கருப்பு திராட்சை ஊறவைத்து காலை எழுந்ததும் சாப்பிடுவேன். மதியம் புரொடக்‌ஷன் சாப்பாடு தான். ரொம்ப பசியெடுத்தா வேணா, ஆர்டர் பண்ணுவேன். பிறகு நைட்டு வழக்கம்போல வீட்டு சாப்பாடுதான் என ஹிமா பிந்து தனது லைஃப் ஸ்டைல் குறித்து பேசினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment