சன் டிவியில் ஒளிப்பரப்பான தென்றல் சீரியலில் நடித்து தமிழகம் முழுவதும் பிரபலமானவர் ஸ்ருதி ராஜ். தொடர்ந்து அபூர்வ ராகங்கள், ஆபிஸ், அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், அழகு, தாலாட்டு சீரியல்களில் நடித்தார்.
ஒருமுறை ஸ்ருதி ராஜ் விகடன் இதழுக்கு அளித்த பேட்டியில், என் சொந்த ஊர் கேரளா, குருவாயூர். நான் ஸ்கூல் படிக்கும்போதே அம்மாவுக்கு என்னை சினிமாவில் நடிக்க வைக்கணும் ஆசை.
இன்னும் சொல்லபோனா எங்க ஊர்ல யாருமே சினிமா பக்கமோ டி.வி பக்கமோ போனது கிடையாது. அப்படியிருக்கும்போது நான் சினிமாவுல நடிச்சுட்டு ஊருக்கு திரும்பிப் போகும்போது எல்லோரும் எங்கள விசாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. நீதானம்மா அந்த சினிமாவுல நடிச்சிருந்தனு கேட்கும்போது, அப்படியே பறக்கிற மாதிரி இருந்தது.
நான் ஏழாவது படிக்கிறப்போவே ஒரு மலையாளப் படம் மூலமாக சினிமாவுக்கு வந்துட்டேன்.
ஒரு மலையாளப் பத்திரிகையில் வந்த என் போட்டோவைப் பார்த்து, ‘மாண்புமிகு மாணவன்’ தமிழ்ப் படத்தில் முக்கியமான ரோல் கிடைச்சுது. ஸ்கூல் பொண்ணான நான், அந்தப் படத்தில் காலேஜ் ஸ்டூடண்ட்டாக நடிச்சது வித்தியாசமான அனுபவம்.
அடுத்தடுத்து மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்கள்ல ஹீரோயினா நடிச்சேன். அப்போ கேரளாவிலிருக்கும் எங்கக் கிராமத்துலேருந்து அப்பாவோடு சென்னைக்கு வந்து நடிச்சுட்டுப்போவேன்.
சினிமா பின்புலம் இல்லாததால நல்லது கெட்டது சொல்லக்கூட எனக்கு உடன் யாருமில்லை. அதனால நல்லா படிச்சுட்டிருந்த என்னால படிப்பில் சரியா கவனம் செலுத்த முடியலை. மற்ற மொழிப் படங்களால்கூட எனக்கு ஓரளவுக்குப் புகழ் கிடைச்சுது. ஆனா, தமிழ்ப் படங்களால் பெருசா ரீச் எனக்குக் கிடைக்கலை.
ஒருகட்டத்துல ஆக்டிங்கை நிறுத்திடலாம்னு நினைச்ச சமயத்துலதான் 'தென்றல்' வாய்ப்புக் கிடைச்சுது.
அதுக்குப் பிறகு எங்க போனாலும் 'துளசி'னு கூப்பிட ஆரம்பிச்சாங்க. சீரியல் எனக்கு அம்சமா செட் ஆகிட்டதால, சினிமாவுல பெருசா கவனம் செலுத்துறதில்லை. ஆனா, நல்ல கேரக்டர் வந்தா சினிமாவிலும் நடிப்பேன், என்று பல விஷயங்களை கூறினார்.
ஸ்ருதி ராஜ் 40 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இன்னமும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
எந்த ஒரு விஷயத்தையும் திட்டமிட்டு செய்வது கிடையாது. அப்படி திட்டமிட்டு செய்தாலும் அது சரியாக நடந்தது கிடையாது. எனவே என் திருமணம் குறித்து நான் எதையும் யோசிக்கவில்லை. என்னை பற்றியும் எனது திருமணம் குறித்தும் எனது பெற்றோர்கள் பார்த்துக் கொள்வார்கள் என கூறுகிறார் ஸ்ருதி.
ஸ்ருதி ராஜுக்கு சைக்கிளிங் செல்லும் பழக்கம் உள்ளது, தினமும் காலை நேரம் அல்லது விடுமுறை நாட்களில் சைக்கிளிங் செல்கிறார். தினமும் காலையில் வாக்கிங் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
உடல் எடையை குறைக்க அதிக கொழுப்புகள், எண்ணெய் உணவுகளை நிறுத்திக் கொண்டார். ஆரோக்கியமான உணவுகளை 6 முறை பிரித்து சாப்பிடுகிறார். இதனால் 40 வயதிலும், அழகாக, ஃபிட்டாக இருக்கிறார்….
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”