செம்பருத்தி சீரியலில் பார்வதியாக நடித்து, ரசிகர்களை கவர்ந்தவர் ஷபானா. இவரும் பாக்கியலெட்சுமி சீரியலில் ஆரம்பத்தில் செழியனாக நடித்த ஆர்யனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
ஷபானா முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர், ஆர்யன் இந்து மதத்தைச் சேர்ந்தவர். இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் பெற்றோர் சம்மதமில்லாமல், திருமணம் செய்து கொண்டனர்.
இப்போது ஆர்யன் ஜீ தமிழ் டிவியின் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நடிக்கிறார்.
இந்நிலையில் ஷபானா சமீபத்தில் பகிர்ந்த இன்ஸ்டாகிரம் பதிவு ஒன்று இப்போது வைரல் ஆகியுள்ளது. வாரிசு இசை வெளியீட்டு போது நடிகர் விஜய் உடன் சேர்ந்து எடுத்த படத்தை பகிர்ந்த ஷபானா அதில்,
24.12.2022❤
இறுதியாக! கனவு நினைவானது!
அண்ணனை பாத்துட்டேன்
நான் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது
அதனால் நான் அதை என்றென்றும் என்னுடன் வைத்திருக்கிறேன்
ஆனா ஒன்னு சொல்றேன்
அவரே பாத்ததுக்கு அப்புறம் அவர் மேல இருக்கிற அன்பும் மரியாதையும் 100 மடங்கு அதிகமா தான் ஆகிருக்கு!!!! அவ்ளோ தான் சொல்லுவேன்
லவ் யூ அண்ணா என்று அன்புடன் பதிவிட்டுள்ளார்.
ஷபானா, விஜய்யின் தீவிர ரசிகை என்பது அனைவருக்கும் தெரியும்.
ஜீ தமிழ் டிவியின் 2019 குடும்ப விருதுகள் வழங்கும் விழாவில், மக்கள் விரும்பும் ஹீரோயின் விருதை ஷபானா பெற்றார். அப்போது விஜய்யின் அம்மா ஷோபா, அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் தான் இந்த விருதை அவருக்கு வழங்கினர். அப்போது கூட தான் விஜய்யின் தீவிர விசிறி, அண்ணாவை கேட்டதா சொல்லுங்க என்று ஷபானா கூறினார்.
இப்போது நேரிலேயே அவரது ஹீரோவை பார்த்த ஷபானாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“