அவள் உலக அழகியே! பிக்பாஸ் ஷெரினா கியூட் கிளிக்ஸ்

ஷெரினா ஒருமுறை தனது நண்பர்களுடன் சேர்ந்து மாலுக்கு சென்றபோது அங்கு ஃபெமினா மிஸ் இந்தியா சவுத் போட்டியாளர்களுக்கு, ஆடிஷன் நடந்து கொண்டிருந்தது.

ஷெரினா ஒருமுறை தனது நண்பர்களுடன் சேர்ந்து மாலுக்கு சென்றபோது அங்கு ஃபெமினா மிஸ் இந்தியா சவுத் போட்டியாளர்களுக்கு, ஆடிஷன் நடந்து கொண்டிருந்தது.

author-image
abhisudha
New Update
Sheriina

Sheriina

Bigg Boss 6 Tamil: விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இம்முறை 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் ஆரம்பத்திலே பலரது கவனத்தையும் ஈர்த்தவர் மாடல் அழகி ஷெரினா. கேரளாவில் பிறந்த இவர், பெங்களூரில் வளர்ந்து இருக்கிறார். இவர் பெங்களூரில் சாய்ராம் மோட்டார்ஸ் என்ற ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும், UVI என்ற ஸ்டூடியோ ஒன்றையும் நடத்தி வருகிறார்.

Advertisment

ஷெரினா ஒரு பிரபலமான மாடல். Grazia Ford Super Model Of India World என்ற பட்டத்தை வென்று இருக்கிறார். பல விளம்பர படங்களில் நடித்து இருக்கிறார்.

ஷெரினா  ஒருமுறை தனது நண்பர்களுடன் சேர்ந்து மாலுக்கு சென்றபோது அங்கு ஃபெமினா மிஸ் இந்தியா சவுத் போட்டியாளர்களுக்கு, ஆடிஷன் நடந்து கொண்டிருந்தது. அப்போது நண்பர்கள் வற்புறுத்தியதால் ஷெரினாவும் அந்த ஆடிஷனில் கலந்து கொண்டார். அந்த போட்டியில், ஷெரினா, ஃபெமினா மிஸ் இந்தியா சவுத் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று முதல் இன்றுவரை ஷெரினா ஒரு வெற்றிகரமான மாடலாக ஜொலித்து வருகிறார்.

ஆனால், இவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. சமுத்திரகனி நடிப்பில் வெளியான ‘வினோதய சித்தம்’ படத்தில் நடித்து இருந்தார். இப்போது பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறார்.

Advertisment
Advertisements

ஷெரினா கியூட் போட்டோஸ் இங்கே..

publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: