அதிக வேலைப்பாடுகள் இல்லாத பிளெய்ன் புடவைகளில் ஜொலிக்கும் ஷில்பா

குஷி படத்தில் விஜயுடன் ‘மேக்கரீனா’ பாடல் இவற்றில் தோன்றிய ஷில்பா ஷெட்டி, அதிக வேலைப்பாடுகள் இல்லாமல், பிளெய்னாக இருக்கும் புடவைகளை பல வடிவங்களில் அணிந்து அசத்துவார்....

தமிழ் சினிமாவில் சில படங்களில் மட்டுமே முகத்தைக் காட்டினாலும், ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தவர் ஷில்பா ஷெட்டி. பிரபுதேவாவுடன் மிஸ்டர் ரோமியோ, குஷி படத்தில் விஜயுடன் ‘மேக்கரீனா’ பாடல் இவற்றில் தோன்றிய ஷில்பா ஷெட்டி, அதிக வேலைப்பாடுகள் இல்லாமல், பிளெய்னாக இருக்கும் புடவைகளை பல வடிவங்களில் அணிந்து அசத்துவார். சாதாரண புடவைகள் கூட அவர் அணிந்தபின்பு பொலிவுபெறும். சமீபத்தில் இந்தி சேனல் ஒன்றில் நடைபெறும் சூப்பர் டான்ஸர் நிகழ்ச்சியின் துவக்கத்திற்கு பிங்க் நிறத்திலான பிளெய்ன் புடவை மற்றும் கருப்பு நிறத்திலான ஜாக்கெட் அணிந்து ரசிகர்களை கவர்ந்தார். இவரின் தனிப்பட்ட ஆடை வடிவமைப்பாளர் சஞ்சனா பத்ராவுக்குத்தான் பாராட்டுகள் அனைத்தும் சேர வேண்டும். ஷில்பா ஷெட்டி பிளெய்ன் புடவைகளிலும் கார்ஜியஸாக தோன்றிய சில புகைப்படங்கள்.

×Close
×Close