ஸ்ரேயா அஞ்சன், சித்து சித் இருவரும் சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து, இன்று ரியல் ஜோடியாகளாக உள்ளனர். கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ சீரியலில் சித்து சித் மற்றும் ஸ்ரேயா அஞ்சன் இருவரும் ஜோடியாக நடித்தனர். இந்த சீரியலில் இருவருக்கும் இருந்த கெமிஸ்ட்ரி, ரசிகர்களைக் பெரிதும் கவர்ந்தது.
Advertisment
தற்போது, சித்து விஜய் டிவியில் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஸ்ரேயா, ஜீ தமிழ் டிவியில் ரஜினி சீரியலில் நடிக்கிறார். அருண் கிரைசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அருண் கிரைசர், யாழினி ராஜன், சுபிக்ஷா, ஹேமந்த் குமார் உள்ளிட்ட பலர் இதில் நடிக்கின்றனர்.
ஸ்ரேயா அஞ்சன் ஏற்கெனவே அன்புடன் குஷி, அரண்மனை, நந்தினி உள்ளிட்ட சீரியல்களில் தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார்.
ஸ்ரேயா பிறந்தநாளை முன்னிட்டு சித்துவும், ஸ்ரேயாவும் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் ஜீ தமிழ் டிவியின் 4வது குடும்ப விருதுகள் விழா நடந்தது. இதில், ரஜினி சீரியலுக்காக ஸ்ரேயா அஞ்சனுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. சித்துவும், ஸ்ரேயாவும் இருக்கும் அந்த புரோமோ கூட சமீபத்தில் வெளியாகியது.
அப்போது எடுத்த புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஸ்ரேயா அஞ்சன அதில், பெருமையுடனும், நன்றியுடனும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்.
பாப்பா, வாழ்க்கையில் நான் விரும்புவதை ஒருபோதும் தடுக்காமல் இருந்ததற்காக நான் உங்களை மதிக்கிறேன், பாராட்டுகிறேன். நீங்கள் இல்லாமல் நான் இருக்கும் இடத்தை என்னால் அடைந்திருக்க முடியாது.
என் எல்லா வெற்றிக்கும் காரணம் நீதான். லவ் யூ புருஷா ❤
உங்கள் அன்பு மற்றும் உங்கள் நேர்மறை ஆற்றலுக்கு எனது ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. அது என் ஆத்மாவை உயர்த்துகிறது, நீங்கள் அற்புதமானவர்கள்
இந்த அருமையான வாய்ப்புக்கு நன்றி ஜீ தமிழ், ரமணன் சார், அரண் சார் என் ஒட்டுமொத்த ரஜினி குழுவிற்கும் நன்றி என்று எமோஷனலாக அதில் எழுதியுள்ளார்.
சிறந்த நடிகை விருது வாங்கிய ஸ்ரேயாவுக்கு ரசிகர்கள் இணையத்தில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“