தமிழில் ‘ஸ்ரீ’ படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை ஷ்ருதிகா. அதற்கு பிறகு ஆல்பம், தித்திக்குதே, நள தமயந்தி போன்ற படங்களில் நடித்தார்.
இவர் பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஆவார். ஷ்ருதிகா அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிக்கு ஆரவ் என்ற மகன் இருக்கிறான். தற்போது ஷ்ருதிகாவுக்கு 34 வயதாகிறது. திருமணம், குழந்தை என செட்டில் ஆனவருக்கு ‘குக் வித் கோமாளி’ மூன்றாவது சீசன் நல்லதொரு கம்பேக்காக அமைந்தது.
ஷ்ருதிகா சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் படித்தார். அவருடன் இப்போது கோலிவுட்டில் நடிக்கும் கலைரசன், கிரண் குமார் ஆகியோரும் படித்துள்ளனர்.
கல்லூரியில் படிக்கும் போது நல்ல தோழர்களாக இருந்த மூவரும், 5 ஆண்டுகள் கழித்து சமீபத்த்தில் மீண்டும் சந்தித்தனர். அப்போது எடுத்த புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஷ்ருதிகா, அதில் ’கல்லூரியில் இருந்த என்னோட பெஸ்ட்டு ஃபிரெண்ட்ஸ்...
ஒரே பெண்கள் பள்ளியில் படித்த பிறகு, நான் ஒரு கோ எட் கல்லூரியில் நுழைந்து இந்த இரண்டு ஏஞ்சல்களை சந்தித்த நேரம் எனக்கு நினைவிருக்கிறது, அவர்கள் கல்லூரியை என் வாழ்க்கையின் மிகவும் கலகலப்பான கோல்டன் பேட்ச் ஆக மாற்றினார்கள். ஆண்கள் சிறந்த நண்பர்களாக இருக்க முடியும் என்று அவர்கள் எனக்குக் காட்டினார்கள், பத்திரமாக பார்த்துக் கொள்வார்கள், அவர்கள் சுற்றி இருக்கும்போது மிகவும் பாதுகாப்பாக உணர வைத்தனர்.
ஆனால் அவர்கள் பாதியிலேயே கல்லூரியை விட்டு வெளியேறிய பிறகு நான் மிகவும் கவலையடைந்தேன்.
அவர்கள் இல்லாமல் நான் கல்லூரியை விட்டு வெளியேற இன்னும் 2 வருடங்கள் இருந்தது.. ஆனால் அவர்கள் என்னை ஒருபோதும் வெற்றிடத்தை உணர விடவில்லை.
பின்னர் வாழ்க்கை மிகவும் பிஸியாக மாறியது, நம் ஒவ்வொருவருக்கும் எங்கள் சொந்த முன்னுரிமைகள் இருந்தன, 5 ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் நேற்று சந்தித்தோம், எதுவும் மாறவில்லை !!!
அதே கலகலப்பு!! ஒருவரையொருவர் அடித்து, ஒருவரையொருவர் கேலி செய்து, சிரித்தோம்!!
15+ வருட நட்பு மற்றும் இன்னும் நிறைய வரவிருக்கிறது❤’ என்று ஷ்ருதிகா அதில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil