scorecardresearch

இந்த பார்ட்டிவேர் லெஹாங்கா சோலி எப்படி இருக்கு? ஷ்ருதிகா கிளிக்ஸ்

ஷ்ருதிகா சமீபத்தில் பார்டிவியர் லெஹாங்கா சோலி உடை அணிந்து எடுத்த போட்டோஷூட் இன்ஸ்டாவில் வைரல் ஆகியது.

Shruthika Arjun
Shruthika Arjun

தமிழில் ‘ஸ்ரீ’ படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை ஷ்ருதிகா. அதற்கு பிறகு ஆல்பம், தித்திக்குதே, நள தமயந்தி போன்ற படங்களில் நடித்தார்.

இவர் பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஆவார். ஷ்ருதிகா அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிக்கு ஆரவ் என்ற மகன் இருக்கிறான். தற்போது ஷ்ருதிகாவுக்கு 34 வயதாகிறது. திருமணம், குழந்தை என செட்டில் ஆனவருக்கு ‘குக் வித் கோமாளி’ மூன்றாவது சீசன் நல்லதொரு கம்பேக்காக அமைந்தது.

இப்போது ஷ்ருதிகா விஜய் டிவியின் கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் சீசன் 4 இல் நடுவராக இருக்கிறார்.

ஷ்ருதிகா சோஷியல் மீடியாவிலும் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பார். இவரது இன்ஸ்டாகிராமில் அடிக்கடி குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள், போட்டோஷூட்களை பகிர்ந்து கொள்வார். அப்படி ஷ்ருதிகா சமீபத்தில் பார்டிவியர் லெஹாங்கா சோலி உடை அணிந்து எடுத்த போட்டோஷூட் இன்ஸ்டாவில் வைரல் ஆகியது.

இங்கே பாருங்க…

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Shrutika arjun instagram photos cook with comali vijay tv