scorecardresearch

தோல் பளபளப்பு, மார்பக வளர்ச்சி… சித்த மருத்துவ குறிப்புகள்

தோல் பளபளப்பு, மார்பக வளர்ச்சி ஆகியவற்றுக்கு சித்த மருத்துவம் உதவுகிறது. சித்த மருத்துவத்தில், உணவே மருந்து, மருந்தே உணவு. இங்கே சில நோய்களுக்கான சித்த மருத்துவக் குறிப்புகள் இங்கே தருகிறோம்.

தோல் பளபளப்பு, மார்பக வளர்ச்சி… சித்த மருத்துவ குறிப்புகள்

தமிழில் உடலை மெய் என்றார்கள். தேகம் இறந்தபின் அழிவதாக இருந்தாலும் உயிருடன் இருக்கும்போது அதுதான் மெய்யானது. அந்த மெய்யான உடலை பேணி வளர்ப்பது, நோய் ஏற்பட்டால் இயற்கை பொருட்களைக் கொண்டு சரி செய்வதும்தான் சித்த மருத்துவம். உடலின் எல்லா நோய்களுக்கும் சித்த மருத்துவம் தீர்வு தருவதாகவே சித்த மருத்துவர்கள் நம்புகிறார்கள்.

தோல் பளபளப்பு, மார்பக வளர்ச்சி ஆகியவற்றுக்கு சித்த மருத்துவம் உதவுகிறது. சித்த மருத்துவத்தில், உணவே மருந்து, மருந்தே உணவு. இங்கே சில நோய்களுக்கான சித்த மருத்துவக் குறிப்புகள் இங்கே தருகிறோம்.

மூட்டு வீக்கம் குறைய எருக்கன் இலைகளை நெருப்பில் வாட்டி மூட்டு வீக்கங்களீன் மீது வைத்து சிறிது நேரத்திற்கு கட்டி வைத்தால் வீக்கம் குறையும்.

முள் வெளியேற

முள் வெளியேற எலிக்காதிலை இலையை அரைத்து முள் குத்திய இடத்தில் வைத்து கட்டினால் முள் ஒடிந்து உள்ளே இருந்து வெளியில் வந்து விடும்.

பாத எரிச்சல் குறைய

பாத எரிச்சல் குறைய மருதாணி இலைகளுடன் எலுமிச்சைச் சாறு கலந்து நன்கு அரைத்துப் பாதத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து சுடுநீரில் கழுவி வந்தால் பாத எரிச்சல் குறையும்.

தோல் பளபளப்புடன் காட்சி தர

தோல் பளபளப்புடன் காட்சி தரும் உடல் மேல் தோல் வரண்டு சொர சொரப்பாக இருப்பின் எலுமிச்சம் பழம், நெல்லிக்காய், நிலக்கடலை ஆகிய மூன்று இலைகளையும் சாப்பிட்டு வர தோல் பளபளப்புடன் காட்சி தரும்.

மார்பகம் வளர்ச்சி பெற

மார்பகம் வளர்ச்சி பெற எழுத்தாணி பூண்டு வேரை பாலில் அரைத்து காலை,மாலை குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.

சிறுகுடல், பெருங்குடல் நோய் குறைய

சிறுகுடல், பெருங்குடல் நோய் குறைய சீரகம், காசுக்கட்டி, களிப்பாக்கு, கோரோசனை ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு மைபோல அரைத்து நான்கில் ஒரு பாகம் எடுத்து பாலில் கலந்துச் சாப்பிட்டு வந்தால் சிறுகுடல், பெருங்குடல் நோய்கள் குறையும்.

யானைச்சொறி

இது தடுப்பாற்றல் மண்டலக் கோளாறால் தோலில் ஏற்படும் பாதிப்பாகும். இதனால் சிவப்பான, தகடு போன்ற பொருக்குகள் உண்டாகும். வெள்ளி நிற செதில்கள் இவற்றைப் பொதிந்திருக்கும். இது பரவாது. உடலின் சிறு பகுதியையே இது பாதிக்கும். நோய்த் தடுப்பு மண்டலம், இயல்பான தோலணுவைக், கிருமி என தவறாக உணர்ந்து சைகைகளை அனுப்புவதால் புதிய தோலணுக்கள் அபரிதமாக உற்பத்தி செய்யப்படுகின்றன.

யானைச்சொறியின் வகைகளாவன:

சீழற்ற தடிப்புச் சொறி: இதுவே பொதுவாகக் காணப்படும் யானைச்சொறி வகை. யானைப்படையால் பாதிக்கப்பட்டவர்களில் 80%—90% பேருக்கு இவ்வகையே காணப்படுகிறது. தோலின் அழற்சியுற்ற பகுதிகள் தடிப்பாகக் காணப்படும். இப்பகுதிகள் தடிப்புகள் எனப்படும்.

செஞ்சொறி: தோலில் பரவலான அழற்சியும் உண்டாகும். உடலின் பெரும்பகுதியில்  தோல் உரியும். இதைத் தொடர்ந்து கடுமையான ஊறலும், வீக்கமும், வலியும் ஏற்படும். இவ்வகையான சொறி ஆபத்தானது. அதிக அழற்சியாலும் தோல் உரிதலாலும் உடல் தனது வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை இழக்கும். தோல் தனது தடுப்பாற்றல் வேலையை ஆற்ற முடியாமல் போகும்.
சீழுடையது.

தொற்றற்ற சீழ் நிரம்பிய கொப்புளங்களாக இது தோன்றும். கைகள், கால்கள் போன்ற குறிப்பிட்ட இடங்களிலும், உடலின் எப்பகுதியிலும் படைகள் போலவும் தோன்றும். இதில் அடங்கும் வகைகள்:

எல்லா இடங்களிலும் வரும் சீழுடைய யானைச்சொறி

பஸ்ட்டுலோசிஸ் பல்மாரிஸ் எட் பிளாண்டாரிஸ் (Pustulosis palmaris et plantaris)

வளைய சீழுடை யானைச்சொறி

கைகால் தோலழற்சி

சிரங்கு

பிறவகை யானைசொறியில் அடங்குவன:

மருந்து தூண்டிய யானைச்சொறி

தலைகீழ் யானைசொறி

அணையாடை யானைச்சொறி

ஊறல் போன்ற தடிப்புத் தோலழற்சி

நீர்ச்சொட்டு யானைச்சொறி: 

அதிக எண்ணிக்கையில் சிறிய. செதிலுடைய, சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு கண்ணீர்த் துளிகள் போன்ற புண்கள் ஏற்படும்.

நகச்சொறி: கால் கை நகங்களின் தோற்றத்தில் பல்வேறு வகையான மாற்றங்கள் உண்டாகும். நக அடி நிறமிழத்தல், நகத்தில் குழிவிழுதல், நகத்தின் குறுக்காக கோடு விழுதல், நக அடித்தோல் தடித்தல், நகம் கழன்று பொடிதல் ஆகியவை இதில் அடங்கும்.

தடிப்புச்சொறி கீல்வாதம்: இதில் மூட்டுகளும், இணைப்புத் திசுக்களும் அழற்சி அடைகின்றன. தடுப்புச்சொறி கீல்வாதம் எந்த மூட்டையும் பாதிக்கும். ஆனால், பொதுவாக கால் கை விரல் மூட்டுகளே பரவலாகப் பாதிக்கப்படுகின்றன.

நோய் அறிகுறிகள்

தட்டைவீக்கச் சொறி: தட்டை வீக்கம் எனப்படும் உலர்ந்த, வெள்ளிநிற செதிலுடைய சிவந்த தோல் புண்கள் இதன் அறிகுறி.

துளிவடிவச் சொறி: நெஞ்சு, கரங்கள், கால்கள் மற்றும் உச்சந்தலையில் சிறிய (1 செ,மீ அல்லது 1/3 அங்குலத்தை விடக் குறைவு) துளி-வடிவப் புண்கள் ஏற்படும்.

காரணங்கள்

யானைச்சொறி ஒரு தன்தடுப்பாற்றல் நோய். உடலின் நோய்த்தடுப்பு மண்டலம் மிகையாகச் செயல்பட்டு உடலில் உள்ள இயல்பான திசுக்களையும் தாக்குவதால் இது உண்டாகிறது.

நோய்கண்டறிதல்

பொதுவாக தோலின் தோற்றம் கொண்டே கண்டறியப்படுகிறது. இதற்கெனத் தனியாக இரத்த சோதனையோ நோய்கண்டறியும் முறைகளோ இல்லை.

பல் வலி குறைய

கண்டங்கத்தரிப் பழத்தைக் கறுகி போகாமல் வதக்கி வேக விடவும் பாகல் இலை சாறு பிழிந்து அந்த சாற்றிலேயே கண்டங்கத்தரிப் பழத்தை அரைத்து வைத்த விழுதை நல்லெண்ணெயில் கலக்கி 3 நாட்கள் வெயிலில் காய வைத்து இந்த தைலத்தை பஞ்சில் நனைத்து பல் வலி உள்ள இடத்தில் வைத்தால் பல் வலி குறையும்.

தகவல் உதவி: மருத்துவர் முத்துக்குமார், சித்த மருத்துவ சிறப்பு நிபுணர் மற்றும் ஆராய்ச்சியாளர், வாட்ஸ் அப் தொடர்பு எண் 9344186480

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Siddha midicines for skin glowing and breast growing