ஸ்ரேயா அஞ்சன், சித்து சித் இருவரும் சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து, இன்று ரியல் ஜோடியாகளாக உள்ளனர். கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ சீரியலில் சித்து சித் மற்றும் ஸ்ரேயா அஞ்சன் இருவரும் ஜோடியாக நடித்தனர். இந்த சீரியலில் இருவருக்கும் இருந்த கெமிஸ்ட்ரி, ரசிகர்களைக் பெரிதும் கவர்ந்தது.
Advertisment
பிறகு, சித்து விஜய் டிவியில் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் ஹீரோவாக நடித்தார். ஸ்ரேயா, ஜீ தமிழ் டிவியில் ரஜினி சீரியலில் நடித்தார். இந்த இரண்டு சீரியல்களும் கடந்த ஏப்ரம் மாதம் முடிவுக்கு வந்தன.
ஸ்ரேயா அஞ்சன் ஏற்கெனவே அன்புடன் குஷி, அரண்மனை, நந்தினி உள்ளிட்ட சீரியல்களில் தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார்.
இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ்வாக சித்து, ஸ்ரேயா அஞ்சன் இருவரும், அதில் அடிக்கடி தங்கள் பர்சனல் புகைப்படங்கள், வீடியோஸை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.
இப்போது சித்து தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது. அதில் ஸ்ரேயா, பாக்ஸிங், வெயிட் லிஃப்டிங், யோகா என உடலை வருத்திக் கொண்டு தீவிரமாக வொர்க் அவுட் செய்கிறார்.
திருமணம் சீரியலில் ஃபிட்டாக இருந்த ஸ்ரேயா, அதன்பிறகு உடல் எடை சற்று கூடிவிட்டார். ஆனாலும் அவரது கியூட் லுக் மாறவில்லை. இப்போது ஸ்ரேயா உடல் எடையை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
அதைப் பார்த்த ரசிகர்கள், வொர்க் பண்ணி ஸ்லீம் ஆனா இன்னும் செமய்யா இருப்பீங்க, திருமணம் சீரியல்ல இருக்கிற மாதிரி என்றும், உங்கள் இருவரையும் ஒன்றாக திரையில் பார்க்க நாங்கள் விரும்புகிறோம், நிச்சயமாக ஸ்ரேயா, ஒரு கடின உழைப்பாளி, நீங்கள் இருவரும் உங்கள் இலக்கை அடைவீர்கள் என்று கமெண்டில் வாழ்த்தி பதிவிட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”