அந்தப் புன்னகைதான்! கடற்கரையில் சித்து, ஸ்ரேயா ரொமான்ஸ்

சித்து, ஸ்ரேயா இருவரும் தற்போது பத்து தல படத்தின் நினைவிருக்கா பாடலுக்கு வைத்து ரிகிரியேட் செய்த வீடியோ இப்போது அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.

Shreya Anjan Sid
Shreya Anjan Sid

ஸ்ரேயா அஞ்சன், சித்து சித் இருவரும் சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து, இன்று ரியல் ஜோடியாகளாக உள்ளனர். கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ சீரியலில் சித்து சித் மற்றும் ஸ்ரேயா அஞ்சன் இருவரும் ஜோடியாக நடித்தனர். இந்த சீரியலில் இருவருக்கும் இருந்த கெமிஸ்ட்ரி, ரசிகர்களைக் பெரிதும் கவர்ந்தது.

தற்போது, சித்து விஜய் டிவியில் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஸ்ரேயா, ஜீ தமிழ் டிவியில் ரஜினி சீரியலில் நடிக்கிறார். ஸ்ரேயா அஞ்சன் ஏற்கெனவே அன்புடன் குஷி, அரண்மனை, நந்தினி உள்ளிட்ட சீரியல்களில் தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார்.

சித்து, ஸ்ரேயா இருவரும் தற்போது பத்து தல படத்தின் நினைவிருக்கா பாடலுக்கு வைத்து ரிகிரியேட் செய்த வீடியோ இப்போது அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. பாடலாசிரியர் கபிலன் எழுதிய இந்த பாடலை, ஏ. ஆர். அமின், சக்திஸ்ரீ கோபாலன் பாடி உள்ளனர்.

இந்த பாடலுக்கு சித்துவும், ஸ்ரேயாவும் கடற்கரையில் வைத்து எடுத்த வீடியோவை தன் இன்ஸ்டாவில் பகிர்ந்த சித்து அதில், ’அந்தப் புன்னகைதான். முதன்முதலாகப் பார்த்தபோது, ​​என் வாழ்நாள் முழுவதும் அதைப் பார்க்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது’ என்று பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், திருமணம் சீரியலின் போதே, நீங்கள் இருவரும் ஒருவருக்காகவே பிறந்தவர்கள் என்பதை நாங்கள் நிச்சயமாக அறிவோம், கியூட் கபுள், வாழ்க்கைக்கு சரியான பொருத்தம் என்று கமென்டில் வாழ்த்தி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Sidhu sid shreya anchan rajini serial zee tamil tv

Exit mobile version