மாதுளை, தக்காளி, மாம்பழம்… தோலில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?
மாம்பழத் தோல்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து மற்றும் பல வைட்டமின்கள் உள்ளன. தக்காளி தோல்கள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நம்பமுடியாத ஆதாரம்.
பொதுவாக பயன்படுத்தப்படாத பழத்தோல்களை குப்பையில் போடுவது ஒரு பழக்கம். பார்க்க அவை, வேண்டாதது போல தோன்றினாலும், தோல்கள் உண்மையில் ஆரோக்கியமானவை மற்றும் மிகவும் பயனுள்ளவை.
Advertisment
இந்த வழியில், நீங்கள் உணவு வீணாகுவதை குறைப்பது மட்டுமல்லாமல், உங்கள் வாழ்க்கையையும் எளிதாக்குவீர்கள். நீங்கள் இதுவரை யோசிக்காத பழத்தோல்களின் பயன்கள் இதோ…
மாம்பழம்
மாம்பழத் தோல்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து மற்றும் பல வைட்டமின்கள் உள்ளன. சற்று கசப்பான சுவையுள்ள, இந்த தோல்களை சர்க்கரை மற்றும் தண்ணீரில் வேகவைத்து’ மாம்பழ சிரப் தயாரிக்க பயன்படுத்தலாம். சுவையை மேம்படுத்த நீங்கள் சிறிது எலுமிச்சை சாறை சேர்க்கலாம்.
தக்காளி
தக்காளி தோல்கள் ஜீரணிக்க முடியாதவை என்று பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இருப்பினும், இந்த தக்காளி தோல்கள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நம்பமுடியாத ஆதாரம். அவற்றைப் பயன்படுத்துவதற்கான சிறந்த வழி, தோலை வெயிலில் காயவைத்து, உலர வைக்க வேண்டும். பின்னர் நசுக்கி நன்றாக தூள் தயாரிக்க வேண்டும். இந்த தக்காளி தோல் தூளை பல்வேறு உணவுகளில் தாளிக்க பயன்படுத்தலாம்
மாதுளை
மாதுளை ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது, தொண்டை புண் மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் தருகிறது. மாதுளை தோலை அரைத்து, வெதுவெதுப்பான நீரில் பயன்படுத்தவும். இந்த நீரைக் கொண்டு வாய் கொப்பளிக்க’ தொண்டை வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். மேலும், இந்த தோலைக் கொண்டு உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்கவும் முடியும். இந்த தோலின் உட்புறத்தை’ உங்கள் தோலில் மெதுவாக தேய்த்து 10-15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி, மாற்றத்தைப் பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “.