/indian-express-tamil/media/media_files/2025/10/08/ant-2025-10-08-14-56-20.jpg)
வீட்டில் எறும்பு இருப்பது சுகாதார சீர்கேடுகளுக்கு வழிவகுக்கும் வெயில் காலம் என்றாலும் சரி மழைக்காலம் என்றாலும் சரி வீட்டில் எறும்புகளின் தொல்லை இருந்து கொண்டே இருக்கும். வீட்டில் எதாவது ஒரு இடத்தில் சிறிய இனிப்பு துண்டிகள் இருந்தால் போதும் எறும்புகள் உடனே வந்து அதனை மொய்க்க ஆரம்பித்துவிடும். அதுமட்டுமல்லாமல், நம் வீட்டில் நிலைக் கதவுகளையும் எறும்பும் அரிக்கும் நிலையும் ஏற்படும்.
ஒரு இடத்தில் நிம்மதியாக துணிகளை போட முடியாது. உடனே அந்த துணிகளில் எறும்புகள் ஏறி குடிக் கொண்டு இருக்கும். அதை நாம் பார்க்காமல் அணிந்து விட்டோம் என்றால் அவ்வளவு தான் நம் உடம்பு முழுவதும் தடித்துவிடும். நம் வீட்டில் இருக்கும் சர்க்கரை, பருப்பு, கோதுமை என எந்த பொருளையும் எறும்புகள் நிம்மதியாக பயன்படுத்த விடாது.
அந்த பொருட்களில் உடனே ஏறிக்கொண்டு ஓட்டை போட்டு அவற்றை அரிக்க ஆரம்பித்துவிடும். அதுமட்டுமா, நாம் அப்பறம் சாப்பிடலாம் என வைத்து மறந்துவிட்ட பிரிக்காத ஸ்நாக் பொருட்களிலும் எறும்புகள் ஓட்டையிட்டு அவற்றை நாசப்படுத்திவிடுகின்றன. சில சமயங்களில் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளை கூட எறும்புகள் கடித்துவிடுகின்றன.
எறும்புகளை கொல்வதற்காக நாம் என்னதான் எறும்பு பொடி, சாக்பீஸ் போன்ற பொருட்களை பயன்படுத்தினாலும் அவை மீண்டும் மீண்டும் வந்து கொண்டுதான் இருக்கும். இப்படி நமக்கு பெரும் தொல்லையாக இருக்கும் எறும்மை சுலபமாக எப்படி ஓடவிடலாம் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிம்பிள் டிப்ஸ்
ஒரு இயர் பட்சில் கொஞ்சமாக விக்ஸ் போன்ற தலைவலி மருந்தை எடுத்துக் கொள்ளவும். இதை நீங்கள் எங்கு எறும்புகள் அதிகம் இருக்கிறது என்று நினைக்கிறீர்களோ அந்த இடத்தில் தேய்த்துவிடவும். இந்த தலைவலி தையிலத்தின் மணம் மிகும் ஸ்ட்ராங்காக இருப்பதால் எறும்புகள் உங்கள் வீட்டை எட்டிக் கூடா பார்க்காது.
வீட்டில் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் எறும்பு பொடி, சாக்பீஸ் போன்றவற்றை எல்லா இடங்களிலும் பயன்படுத்த முடியாது. ஆனால், அதற்கு பதிலாக இந்த ட்ரிக்கை ட்ரை செய்து பார்க்கலாம். இதன் மூலம் எறும்புகள் கட்டுப்படுவதன் மூலம் நமக்கும் நிம்மதியாக இருக்கும்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.