Advertisment

ஒரே ஒரு டிரிங்க் தான்! தினம் 30 ஆயிரம் டாலர் வருமான ஈட்டும் சிங்கப்பூர் ஹோட்டல்

பார்க்க பழைய பழச்சாறு போல தோற்றமளிக்கும் ஒரு காக்டெய்ல், ஆனால் உண்மையில் அதில் ஆல்கஹால் உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Singapore

Singapore sling

நீங்கள் இதற்கு முன்பு சிங்கப்பூருக்குச் சென்றிருந்தால், ராஃபிள்ஸ் ஹோட்டலில் வழங்கப்படும் ‘தி சிங்கப்பூர் ஸ்லிங்’ ஐகானிக் டிரிங்க் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம்.

Advertisment

இந்த டிரிங்க் ஹோட்டலுக்கு பெரும் பணத்தைக் கொண்டுவருவதாகக் கூறப்படுகிறது, இந்த பானத்தை தினசரி விற்பனை செய்வதன் மூலம் அவர்கள் கிட்டத்தட்ட 30,000 டாலர் வருமானம் ஈட்டுகிறார்கள் என்று news.com.au இன் அறிக்கை கூறுகிறது.

நாளொன்றுக்கு ஏறத்தாழ 1,000 சிங்கப்பூர் ஸ்லிங்களை ஹோட்டல் விற்பனை செய்கிறது - ஒவ்வொன்றும் தோராயமாக $29, இந்திய மதிப்பில் 2,400 ரூபாய் –, சேவைக் கட்டணங்கள் மற்றும் வரிகளைச் சேர்த்த பிறகு, பானத்தின் விலை சுமார் $34 ஆகும்.

1915 ஆம் ஆண்டு ராஃபிள்ஸ் ஹோட்டலில் உள்ள லாங் பாரில் பார்டெண்டர் என்ஜியாம் டோங் பூன் (bartender Ngiam Tong Boon) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க காக்டெய்ல், விரைவில் நாட்டின் தேசிய பானமாக அறியப்பட்டது என்று ஹோட்டலின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்னாசி துண்டுடன் அலங்கரிக்கப்பட்ட ஒரு உயரமான கண்ணாடி கிளாஸில் காக்டெய்ல் பரிமாறப்படும் - இந்த பானத்தில் ஜின், அன்னாசி பழச்சாறு, எலுமிச்சை சாறு, குராக்கோ மற்றும் பெனடிக்டின் (curaçao, Bénédictine). ஆகியவை கலந்துள்ளன.

அதன் சிக்னேட்சர் லைட் பிங்க் ஹியூ, பார்டெண்டரால் பிரேத்தியேகமாக வடிவமைக்கப்பட்டது, கலவையில் சேர்க்கப்படும் கிரெனடைன் மற்றும் செர்ரி லிக்குவரில் இருந்து இந்த நிறம் வருகிறது.

publive-image

பல ஆண்டுகளுக்குப் பிறகும், பழம்பெரும் பானம் இப்போது நன்கு அறியப்பட்டிருக்கிறது

ஹோட்டலின் வலைத்தளத்தின்படி, அந்த காலத்தில், பெண்கள் பொது இடங்களில் மது அருந்தக்கூடாது என்ற விதி இருந்தது, அது ஏற்றுக்கொள்ள முடியாததாகக் கருதப்பட்டது.

அதற்கு பதிலாக, அவர்கள் பொது இடத்தில் தேநீர் அல்லது பழச்சாறு குடிக்கலாம்.

பெண்களின் பானத்தை தயாரிப்பதில் சந்தை இருப்பதைக் கண்ட, பார்டெண்டர் பூன் ஒரு காக்டெய்ல் தயாரிப்பதற்கான ஒரு தொடக்கத்தைக் கண்டார், இது பெண்கள் பொது இடங்களில் குடிக்க கூடாது என்றாலும், இன்னும் சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

ஐகானிக் சிங்கப்பூர் ஸ்லிங் இப்படித்தான் பிறந்தது, பார்க்க பழைய பழச்சாறு போல தோற்றமளிக்கும் ஒரு காக்டெய்ல், ஆனால் உண்மையில் அதில் ஆல்கஹால் உள்ளது.

பல ஆண்டுகளுக்குப் பிறகும், பழம்பெரும் பானம் இப்போது நன்கு அறியப்பட்டிருக்கிறது

இந்த ஹோட்டலில் மற்றொரு வழக்கத்திற்கு மாறான பழக்கம் என்னவென்றால், இங்கு கஸ்டமருக்கு வேர்க்கடலை பரிமாறுவதும், அதன் தோலை தரை முழுவதும் சிதறடிக்க அவர்களை ஊக்குவிப்பதும் ஆகும்.

பிசினஸ் இன்சைடரின் கூற்றுப்படி, சிங்கப்பூரில் குப்பை கொட்டுவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது மற்றும் $1,000 அபராதம் விதிக்கப்படுகிறது என்ற உண்மை இருந்தபோதிலும், ஹோட்டலின் இணையதளம் அது "ஊக்குவிக்கப்படும்" ஒரே இடம் என்று கூறுகிறது.

ராணி இரண்டாம் எலிசபெத் முன்பு ஹோட்டலில் தங்கியிருந்தார். 2006 இல், அவர் முதல் முறையாக ஹோட்டலுக்குச் சென்றார்.

ஜான் வெய்ன், லிஸ் டெய்லர் மற்றும் மைக்கேல் ஜாக்சன் போன்ற பிரபல விருந்தினர்களுக்கும் ஹோட்டல் விருந்தளித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment