காதல் மனைவி கொடுத்த ஊக்கம்… டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி!

டாக்டர் அப்துல் கலாம் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் இருந்து நாட்டுப்புற நாயகன் விருது.

By: Updated: January 9, 2021, 03:14:25 PM

singer velumurugan wife velmurugan age : பிரபல கிராமிய பின்னணி பாடகர் வேல்முருகன் பிக் பாஸ் 4ல் போட்டியாளராக கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சி துவக்க நாளில் பேசிய கமல் வேல்முருகன் கிராமிய பாடல்களை தற்போதைய இளைஞர்களும் அறியும் வண்ணம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஆனால் வேல்முருகன் பிக் பாஸில் 4 வாரங்கள் மட்டுமே இருந்தார். அவர் மற்றவர்களை பற்றி குறை கூறவே பயப்படுகிறார் என்கிற குற்றச்சாட்டும் அவர் மீது இருந்த நிலையில் நான்காவது வாரத்தில் அவர் எலிமினேட் செய்யப்பட்டார்.

வேல்முருகன் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராக வலம் வருகிறார். மேலும் இவர் நாட்டுப்புற பாடல்களால் பிரபலமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கிராமிய பாடகர், சினிமா பின்னணி பாடகர், மரபு இசை கலைஞர், நாட்டுப்புற நாயகன் என பல விருதுகள், பாடல் உருவாக்கத்தில் தோன்றிய முதல் பாடகர் , கின்னஸ்சாதனை படைப்பாளி, நடிகர் என பல்வேறு முகங்களை கொண்ட பாடகர் வேல்முருகன்.

” குழந்தை பருவத்தில் இருந்தே, பாடல் மற்றும் இசையின் மீது ஆர்வம் கொண்டிருந்த இவர் ஐடிஐ படித்து முடித்த பின், இசையின் மீதிருந்த ஆர்வத்தால் அடையாறில் உள்ள இசைக்கல்லூரியில் சேர்ந்து பயின்றார். பின்னர் ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்த விநாடி வினா நிகழ்ச்சியில் பங்கேற்றார், அப்போது தற்செயலாக ஒரு பாடலை பாட , அந்த நிகழ்ச்சியை பார்த்த இயக்குனர் ” சசிகுமார்” இவரை பற்றி இசையமைப்பாளர் “ஜேம்ஸ் வசந்திடம்” கூறியுள்ளார். இப்படியாக இவருக்கான சினிமா வாய்ப்பு 2008 ல் சுப்பிரமணியபுரம் படத்தில் ” மதுர குலுங்க” என்ற பாடலுக்கு கிடைத்தது. பின்னர் நாடோடிகள் படத்தில் ” ஆடுங்கடா மச்சான் ” பாடல் 2009 ல் பாடினார். கடைசியாக இவர் அசுரன் படத்தில் “கத்தரி பூவழகி ” என்ற பாடலை 2019 ல் பாடியுள்ளார். இவர் இதுவரை 350 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் இந்திய ராணுவம் தொடர்பாக எழுதிய பாடலுக்கு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவரிடம் மரபு இசை நாயகன் விருது. டாக்டர் அப்துல் கலாம் மற்றும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் இருந்து நாட்டுப்புற நாயகன் விருது.

2020ம் ஆண்டிற்கான பெரியார் விருது 2013ம் ஆண்டிற்கான தமிழக அரசின் கலைமாமணி விருது ( 2019ல் முதல்வர் பழனிசாமியால் வழங்கப்பட்டது) விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், புஷ்பவனம் குப்புசாமியை தொடர்ந்து கலைமாமணி விருது பெறும் 3வது கிராமிய பாடகர் இவர் தான்) 2020 பொங்கல் விழாவில், சென்னை போலீஸ் கமிஷனர் சார்பில் விருது போன்றவற்றை பெற்றுள்ளார். மேலும் இவருக்கு அமெரிக்கன் பல்கலைகழகம் உட்பட இரண்டு கவுரவ டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Singer velumurugan wife velmurugan age singer velumurugan wife kala bigg boss velmurugan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X