'தனியாக வரும் பெண்ணுக்கு அனுமதி கிடையாது'; வைரலாகும் ஹைதராபாத் ஹோட்டல்

சிங்கப்பூரைச் சேர்ந்த 22 வயதான என்ஆர்ஐ பெண் கலைஞர் நுபுர் சரஸ்வத், நேற்று(சனி) காலை ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்குவதற்காக வந்திருக்கிறார். ஆனால், ஹோட்டல் நிர்வாகம் அவரை அங்கு தங்க அனுமதிக்கவில்லை. அவர் ஏன் சென்று கேட்டதற்கு, “தனியாக வரும் பெண்ணுக்கு தங்க இங்கு அனுமதி இல்லை” என்று நிர்வாகம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து நுபுர் சமூக தளத்தில், “என்ன தங்க அனுமதிக்காததால், நான் ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டலுக்கு வெளியே நின்றுக் கொண்டிருக்கிறேன். நான் ஹோட்டலில் இருப்பதைவிட, தெருவில் நின்றால் அதிக பாதுகாப்புடன் இருப்பேன் என அவர்கள் நினைத்திருப்பார்கள் போல” என பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஹோட்டல் நிர்வாகம், “இந்த பகுதி ‘மோசமான’ பகுதி என்பதால், தனியாக வரும் பெண்களுக்கும், திருமணம் ஆகாத ஜோடிகளுக்கும் இங்கு தங்க அனுமதி அளிக்கப்படுவதில்லை. மற்றபடி நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல” என்று குறிப்பிட்டுள்ளது.

இச்சம்பவம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

×Close
×Close