மாசுபாடு, ஈரப்பதம் மற்றும் அதிகப்படியான எண்ணெய்/இனிப்பு உணவுகள் ஆகியவை சருமத்தில் விரும்பத்தகாத மாற்றங்களுக்கு வழிவகுத்து, அதன் இயற்கையான பொலிவை இழக்கச் செய்யும்.
மாதவிடாய் சுழற்சியும் உங்கள் சருமத்தின் தோற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. சருமத்தின் ஆரோக்கியத்தையும், தோற்றத்தையும் தீர்மானிக்கும் அனைத்து காரணிகளும் இருந்தபோதிலும், ஒரு மோசமான சருமத்தை யாரும் விரும்புவதில்லை.
இந்த எளிய, ஹோம்மேட் பேக்ஸ் மூலம் உங்கள், சருமத்தின் அந்த பழைய பளபளப்பை மீட்டெடுக்கலாம்! இங்கே பாருங்கள்!
பாதாம் ஃபேஸ் பேக்

4-5 பாதாம் பருப்பை இரவு முழுவதும் பாலில் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் அவற்றை தோலுரித்து இரண்டு பொருட்களையும் சேர்த்து பேஸ்ட் செய்யவும். இரவில், இந்த பேஸ்ட்டை லேசாக உங்கள் முகம், கழுத்து பகுதிகளில் தடவி, மறுநாள் காலையில் கழுவினால், உங்கள் சருமம் பளபளப்பாகும்.
பாதாமில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது உங்கள் சருமத்தை நச்சுகளை நீக்கி சுத்தம் செய்து நீங்கள் விரும்பும் பொலிவைப் பெற உதவும்.
வாழைப்பழம்- தயிர் மாஸ்க்

பிசைந்த வாழைப்பழத்துடன் இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை கலந்து, ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்க்கவும். கலவை மென்மையாக இருப்பதை உறுதி செய்து, உங்கள் முகத்தில் தடவவும்.
முழுவதுமாக காய்ந்தவுடன் கழுவி விடவும். உலர்வதற்கு சுமார் அரை மணி நேரம் ஆகும். இந்த மாஸ்க், குழந்தை போன்ற மென்மையான சருமத்தை உங்களுக்கு கொடுக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“