ஒரு சூடான, வெயில் நாளில் ஒளிரும் முகப்பரு இல்லாத சருமத்திற்கு எளிதான தீர்வு உங்களுக்கு வேண்டுமா? ஐஸ் க்யூப்ஸ் உள்ளே இருந்து மட்டுமல்ல, வெளியிலிருந்தும் நம்மை புத்துணர்ச்சியுடன் உணர வைக்கும்.
வெள்ளரி இயற்கையாகவே உங்கள் சருமத்திற்கு இதமானவை. இதில் வைட்டமின் சி மற்றும் காஃபிக் அமிலம் உள்ளது, இது சருமத்தை முழுவதுமாக ஹைட்ரேட் செய்கிறது.
எப்படி செய்வது?

ஒரு வெள்ளரிக்காயை ஜூஸ் எடுத்து, அதில் சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து, கலவையை ஐஸ் ட்ரேயில் ஊற்றி உறைய வைக்கவும்.
உங்கள் முகம் மற்றும் கழுத்து முழுவதும் ஐஸ் கட்டியை மெதுவாக தேய்க்கவும், பின்னர் 15 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் சாற்றை கழுவவும்.
பலன்கள்
ஐஸ் கியூப்ஸ் உங்கள் சருமத்தை இறுக்கமாக்குகிறது, வீங்கிய கண்களுக்கு சிகிச்சையளிக்கிறது. முகத்தில் எண்ணெய் உற்பத்தி மற்றும் சிவத்தல் வாய்ப்புகளை குறைக்கிறது.முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளுக்கு சிகிச்சையளிக்கிறது. கருவளையங்களையும் நீக்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“