வெந்தயம், ஆயுர்வேதத்தில் பாரம்பரிய மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இது முடி உதிர்வை நிறுத்தவும் அறியப்படுகிறது. மேலும், வெந்தய எண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது
Advertisment
வெந்தயம் ஹேர் பாலிக்கிளுக்கு ரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது. வெந்தயத்தில் ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ, கே மற்றும் சி ஆகியவை ஏராளமாக உள்ளன, மேலும் இது பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்பு போன்ற கனிமங்களின் களஞ்சியமாகவும் உள்ளது.
அவற்றில் அதிக புரதம் மற்றும் நிகோடினிக் அமிலம் உள்ளது, இது முடி உதிர்தல் மற்றும் பொடுகுத் தொல்லையைத் தடுக்க உதவுகிறது. வறட்சி, வழுக்கை மற்றும் முடி உதிர்தல் போன்ற பல்வேறு உச்சந்தலை பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.
வெந்தயம் கொண்டு நீங்களே வீட்டில் செய்யக்கூடிய சில அழகு பராமரிப்பு குறிப்புகள் இங்கே உள்ளன.
வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து, தலைக்கு தேய்த்து குளித்தால் பூஞ்சை, பாக்டீரிய தொற்றைக் குறைக்கும், பொடுகு தொல்லையும் இருக்காது. கூந்தல் நன்றாக வளரும்.
முகத்தில் உள்ள பருக்கள் மறைந்தாலும், அதன் வடுக்கள் பலருக்கு மாறாமல் இருக்கும். வெந்தயம் முகப்பரு தழும்பை மட்டும் நீக்குவதில்லை. முகத்தின் தோற்றத்தையும் பொலிவுடையதாக மாற்றும்.
வெந்தய பொடி, தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி ஸ்கரப் செய்து கழுவி வர, பருக்கள் வருவது தடுக்கப்படும்.
வெந்தயத்தை ஊற வைத்து விழுது போல் அரைத்து, முகத்தில் தடவி மாஸ்க் போல் பயன்படுத்தலாம். தழும்புகளின் மீது தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.
வெந்தயம் சிறந்த க்ளென்சராகவும் செயல்படும். தினமும் வெந்தயத்தை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்து கழுவ வேண்டும். இதன்மூலம், சருமத்துளைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் அனைத்தும் நீங்கி சருமம் சுத்தமாக இருக்கும்.
வெந்தய பொடியை தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரிக்கும்.
வீட்டில் ஓய்வு நேரம் கிடைக்கும் போது இந்த குறிப்புகளை செய்து பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“