Advertisment

வறண்ட சருமத்துக்கு நெய் மாய்ஸ்சரைசர்

எளிதில் கிடைக்கும் நெய் மட்டுமே கொண்டு நீங்களே வீட்டில் செய்யக்கூடிய சூப்பர் மாய்ஸ்சரைசர் ரெசிபி இங்கே உள்ளது.

author-image
abhisudha
புதுப்பிக்கப்பட்டது
New Update
lifestyle

Ghee Moisturizer

பருவகால மாற்றங்கள் காரணமாக, நம்மில் பலருக்கு சருமம் வறண்டு, அரிப்பு ஏற்படுகிறது. சரும பராமரிப்பு என்று வரும்போது மாய்ஸ்சரைசர் அவசியம். ஆனால் ஒரு நல்ல மாய்ஸ்சரைசரை வாங்குவது விலை உயர்ந்ததாக இருக்கும். அது மட்டுமல்லாமல், அழகு தயாரிப்புகளில் பெரும்பாலானவை ரசாயனங்கள் நிறைந்தவை, அவை பெரும்பாலும் தோலுக்கு தீங்கு விளைவிக்கும்.

Advertisment

உங்கள் சருமத்தில் கடுமையான ரசாயனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு, இயற்கைப் பொருட்களுக்கு மாற விரும்புகிறீர்களா?

எளிதில் கிடைக்கும் நெய் மட்டுமே கொண்டு நீங்களே வீட்டில் செய்யக்கூடிய சூப்பர் மாய்ஸ்சரைசர் ரெசிபி இங்கே உள்ளது.

மாய்ஸ்சரைசரை எப்படி செய்யலாம் என்பது இங்கே.

ஒரு கிண்ணத்தில் இரண்டு கரண்டி நெய்யை எடுத்துக் கொள்ளவும். குளிர்ந்த நீரை சேர்க்கவும்.  நன்கு கலக்கவும். வீடியோவில் காட்டியபடி, செமி சாஃப்ட் மிக்ஸ்ராக வரும் வரை தண்ணீரைச் சேர்த்து சேர்த்து நீக்கி கிளறி கொண்டே இருக்கவும். உங்களுக்கு பிடித்த அத்தியாவசிய எண்ணெயில் சில துளிகள் சேர்க்கவும். இதை ஒரு கண்ணாடி ஜாடியில் சேமித்து, பிரிட்ஜில் வைக்கலாம்.

இது வறண்ட சருமத்துக்கு சிறந்தது. குளித்த பிறகு மாய்ஸ்சரைசர் போல அப்ளை செய்யவும்.

இந்த நெய்யில் ஒமேகா 3, 9 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே ஆகியவை உள்ளன, இவை அனைத்தும் சருமத்திற்கு மிகவும் நல்லது, வயதான அனைத்து அறிகுறிகளையும் தாமதப்படுத்துகிறது. இதை தொடர்ந்து பயன்படுத்த சன் ஸ்பாட்ஸ் மறையும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment