நம் சமையலறையில் உடலுக்கு மட்டுமல்ல, சருமத்திற்கும் நன்மை பயக்கும் பொருட்கள் நிறைந்துள்ளன, அவை உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் பிரகாசத்தை பெற உதவுகிறது.
Advertisment
நாம் சாப்பிடுவது நம் தோலிலும் பிரதிபலிக்கிறது. ஆரோக்கியமான சருமத்தைப் பெற, நாம் நன்றாக சாப்பிட வேண்டும், தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். மன அழுத்தமில்லாத வாழ்க்கை மற்றும் ஆரோக்கியமான தோல் பராமரிப்பு வழக்கத்தை கொண்டிருக்க வேண்டும்.
கடலைமாவு, தேன், தயிர் கொண்டு எப்படி ஃபேஸ் பேக் செய்வது என்பதை பாருங்கள்
கடலைமாவு ஒரு கிளீன்சிங் ஏஜண்டாக செயல்படுகிறது மற்றும் வறண்ட சருமத்துக்கு ஊட்டச்சத்து அளிக்கிறது.
Advertisment
Advertisements
தயிரில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், முகப்பரு பாதிப்புள்ள சருமத்திற்கு நல்லது. எண்ணெய் மற்றும் வறண்ட சருமத்திற்கு பயன்படுத்தலாம். இது இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது.
தேன் ஒரு இயற்கை மாய்ஸ்சரைசர், இதில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் இருப்பதால் தோலில் உள்ள அனைத்து பாக்டீரியா மற்றும் கிருமிகளையும் நீக்குகிறது. அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக, இது முகப்பருவால் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது.
ஒரு கிருமி நாசினியாக, இது சருமத்தை குணப்படுத்துகிறது.
எப்படி செய்வது?
ஒரு சிறிய கப் கடலை மாவு, தயிர் மற்றும் சில துளிகள் தேன்’ மூன்றும் ஒரு மென்மையான பேஸ்ட் ஆகும் வரை கலக்கவும். அதை உங்கள் முகம், கழுத்து, காதின் பின்பகுதி ஆகிய இடங்களில் 10-15 நிமிடங்களில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். இதனை தொடர்ந்து பயன்படுத்தும் போது, கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.
தயிர், கடலை மாவில் உள்ள நார்ச்சத்துடன் இணைந்து இறந்த செல்களை அகற்றி, சருமத்திற்கு அடியில் பளபளப்பை மீட்டெடுக்கும். தேன் சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது. கடலை மாவு, சரும துளைகளை அவிழ்க்க உதவுகிறது, இது முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “