ஒளிரும் முகப்பரு இல்லாத சருமம் உங்களுக்கு வேண்டுமா? ஐஸ் க்யூப்ஸ் உள்ளே இருந்து மட்டுமல்ல, வெளியிலிருந்தும் நம்மை புத்துணர்ச்சியுடன் உணர வைக்கும்.
Advertisment
பால் பல நன்மைகளைக் கொண்டுள்ளது, குறிப்பாக உங்கள் சருமத்திற்கு. இது ஸ்கின் டோனர் மற்றும் மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது, நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்களை மறைக்கிறது மற்றும் முகப்பரு தழும்புகளை குணப்படுத்துகிறது.
எப்படி செய்வது?
ஒரு ஐஸ் ட்ரேயில் ¾ கப் பால் மற்றும் ¼ கப் தண்ணீர் ஊற்றவும்.
பால் கியூப்ஸை உங்கள் முகம் மற்றும் கழுத்து முழுவதும் மென்மையாகவும் சமமாகவும் தேய்த்து 30 நிமிடங்கள் விடவும். குளிர்ந்த நீரில் அதை கழுவவும்.
உங்கள் முகத்தில் ஐஸ் கியூப்ஸ் செய்யும் அதிசயங்கள்
– வெயிலுக்கு சிகிச்சையளிக்கிறது.
– உங்கள் சருமத்தை இறுக்கமாக்குகிறது.
– வீங்கிய கண்களுக்கு சிகிச்சையளிக்கிறது.
–சரும துளைகளை குறைக்கிறது.
–முகத்தில் எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கிறது.
– சிவந்து போவதை குறைக்கிறது.
– முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளுக்கு சிகிச்சையளிக்கிறது.
– இது கருவளையங்களையும் நீக்குகிறது
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“