/tamil-ie/media/media_files/uploads/2023/05/azelaic-acid.jpg)
Homemade Moisturizer
பருவகால மாற்றங்கள் காரணமாக, நம்மில் பலருக்கு சருமம் வறண்டு, அரிப்பு ஏற்படுகிறது. எனவே, சீரான இடைவெளியில் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த பருவத்தில் உங்கள் சருமத்தை கவனிப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.
பிரபல பாலிவுட் சீரியல் நடிகை ஜூஹி பர்மர் நீங்களே வீட்டில் செய்யக்கூடிய சூப்பர் மாய்ஸ்சரைசர் ரெசிபியை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
மாய்ஸ்சரைசர் எப்படி செய்யலாம் என்பது இங்கே.
தேவையான பொருட்கள்
* 10-12 பாதாம் இரவு முழுவதும் ஊறவைத்தது
* 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர்
* 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல்
* 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய்
*2 வைட்டமின் ஈ காப்ஸ்யூல்
செய்முறை
ஊறவைத்த பாதாமை தோல் நீக்கி அரைக்கவும். அரைத்த பாதாமுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலக்கவும்.
இப்போது வீடியோவில் காட்டியபடி பாதாமிலிருந்து தண்ணியை மட்டும் வடிகட்டவும். இதில் கற்றாழை ஜெல் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். அடுத்து, வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களைச் சேர்க்கவும். இது ஒரு பிரிசர்வெட்டிவாக செயல்படும்.
சுத்தமான, உலர்ந்த கன்டெய்னரில் சேமிக்கவும். 15 நாட்கள் வரை இந்த மாய்ஸரைசரை சேமித்து வைக்கலாம்.
நன்மைகள் என்ன?
* இது ஆழமாக மாய்ஸரைசர் செய்கிறது.
* சருமத்தை மென்மையாக்குகிறது.
* வறண்ட சருமத்திற்கு உதவுகிறது.
*இந்த மாய்ஸ்சரைசர் சருமத்தின் நிறத்தை சீராக்குகிறது.
ஈரமான தோலில் மாய்ஸ்சரைசர் சிறப்பாக உறிஞ்சப்படுகிறது, ஏனெனில் இது உறிஞ்சுதலை இரட்டிப்பாக்குகிறது. மிக முக்கியமாக, இது இயற்கையானது மற்றும் ரசாயனங்கள் இல்லாதது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us