Four easy homemade scrub for naturally glowing skin
தோல் பராமரிப்பு முறையின் ஒரு அங்கமாக எக்ஃபாலியேஷன் இருக்க வேண்டும் என்றாலும், இந்த ஸ்க்ரப்பிங் செயல்முறை அதிகமாக இருந்தால் நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
Advertisment
"உங்களுக்கு முகப்பரு இருந்தால், உங்கள் முகத்தில் ஸ்க்ரப்பைப் பயன்படுத்த வேண்டாம், அது உங்கள் தோல் பிரச்சனையை மோசமாக்கும்" என்று தோல் மருத்துவர் அப்ரதிம் கோயல் கூறுகிறார்.
தேன்-ஆரஞ்சு ஸ்க்ரப்
Advertisment
Advertisements
ஆரஞ்சு தோல் தூள் மற்றும் ஓட்ஸை சம அளவுகளில் (ஒவ்வொன்றும் இரண்டு தேக்கரண்டி) சேர்த்து, ஒரு தேக்கரண்டி தேனை கலக்கவும். கெட்டியான பேஸ்டுக்கு, சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும். முகத்தில் ஓரிரு நிமிடம் வைத்து, நன்றாக கழுவிய பிறகு, டோன் மற்றும் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தவும்.
வாழைப்பழ ஸ்க்ரப்
இரண்டு பழுத்த வாழைப்பழங்களை எடுத்து மசித்து அரைத்து சர்க்கரை சேர்க்கவும். ஹைட்ரேஷன் மற்றும் ஈரப்பதத்திற்கு, ஒரு தேக்கரண்டி தேன் சேர்க்கவும். இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் ஐந்து நிமிடங்களுக்கு மெதுவாக மசாஜ் செய்யவும், பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும்.
தயிர் மற்றும் பப்பாளி ஸ்க்ரப்
அரை கப் பழுத்த மசித்த பப்பாளியை, இரண்டு தேக்கரண்டி தயிர், மூன்று துளி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேனுடன் கலக்கவும். வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஃபேஸ் ஸ்க்ரப்பை’ உங்கள் தோலில் மென்மையாக மசாஜ் செய்யவும். ஐந்து நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் குளிர்ந்த நீரில் நன்கு கழுவவும்.
உங்கள் கை, கால்களுக்கு எலுமிச்சை ஸ்க்ரப்
ஒரு எலுமிச்சை பழத்தை பாதியாக நறுக்கி, அதை, சர்க்கரை தூளில் தோய்க்கவும். அதை உங்கள் கைகள் மற்றும் கால்களில் ஐந்து நிமிடங்கள் தேய்க்கவும். உங்கள் முகத்தில் இதை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் இது சென்சிட்டிவான முக சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
சரியாக ஸ்க்ரப் செய்வது எப்படி?
உங்கள் முகத்தில் தண்ணீர் தெளிக்கவும். ஒரு தேக்கரண்டி ஸ்க்ரப் எடுத்து, கண்களுக்குக் கீழே உள்ள பகுதியைத் தவிர்த்து, உங்கள் முகம் மற்றும் கழுத்து முழுவதும் மெதுவாக மசாஜ் செய்யவும். அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம். இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஸ்க்ரப்பிங் செய்ய வேண்டாம்.
எத்தனை முறை எக்ஸ்ஃபோலியேட் செய்ய வேண்டும்?
சாதாரண தோல்: வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை எக்ஸ்ஃபோலியேட் செய்யவும்.
வறண்ட சருமம்: வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் எக்ஸ்ஃபோலியேட் செய்யக்கூடாது
காம்பினேஷன் தோல்: வாரத்திற்கு இரண்டு முறை எக்ஸ்ஃபோலியேட் செய்யவும்.
எண்ணெய் பசை சருமம்: வாரத்திற்கு இரண்டு முறை எக்ஸ்ஃபோலியேட் செய்யவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“