4 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் விளக்கெண்ணையை இயற்கையான அழகுப் பராமரிப்பிற்காக பயன்படுத்துகிறார்கள். விளக்கெண்ணையில் வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா 6 மற்றும் 9 அதிகளவில் உள்ளது. அவை சரும ஆரோக்கியத்துக்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமானது.
விளக்கெண்ணையைப் பயன்படுத்துவதால் தலைமுடி உதிர்வது குறையும், இளநரை தடுக்கப்படும், உச்சந்தலையில் உள்ள பிரச்னைகள் நீங்கி தலைமுடி நன்கு வளரும். சருமத்தைப் பொருத்தவரையில், பருக்கள் வராமல் முகத்தைப் பாதுகாக்கும், முகச்சுருக்கம் ஏற்படாமல் காக்கும்.
விளக்கெண்ணெய் இயற்கையாக சருமத்துக்கு போஷாக்கை தரும்.
எப்படி பயன்படுத்துவது?
இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன் சில துளி விளக்கெண்ணையை எடுத்து, உங்கள் முகம் முழுவதும் மென்மையாக மசாஜ் செய்யவும்.
காலையில் எழுந்தவுடன் முகத்தை சுத்தமான நீரால் கழுவிவிடுங்கள். இரவு முழுவதும் ஊற வைக்க முடியவில்லை என்றால் ஒரு மணி நேரம் ஊற வைத்தபின், வெந்நீரில் ஆவி பிடிக்கலாம். இதன்மூலம் முகத்திலுள்ள மென்துவாரங்கள் திறந்து விளக்கெண்ணையைச் சருமம் நன்றாக உறிஞ்சி விடும்.
விளக்கெண்ணையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகச் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கும். காரணம் விளக்கெண்ணெய் சருமத்தின் இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை உருவாக்கும் ஆற்றலை உடையது.
ஏற்கனவே முகச் சுருக்கம் இருந்தால் கூட தினமும் இரவு சில துளிகள் விளக்கெண்ணெயை தடவி காலையில் கழுவிவர நல்ல பலன்களைத் தரும்.
அடர்த்தியான புருவங்களுக்கு
சில பெண்கள் மெலிதான புருவங்கள் இருப்பதால் வருத்தப்படுகின்றனர். மேலும் தங்கள் புருவங்களை அடர்த்தியாக மாற்ற பல அழகு தயாரிப்புகளையும் பயன்படுத்துகின்றனர். ஆனால் விளக்கெண்ணெய் மூலம் நீங்கள் அடர்த்தியான புருவங்களை பெறலாம்.
எப்படி பயன்படுத்துவது?
*ஒரு ஸ்பூலி பிரஷை விளக்கெண்ணெயில் நனைக்கவும்.
* நீங்கள் மஸ்காராவைப் பயன்படுத்துவதைப் போலவே உங்கள் கண் இமைகளிலும் இதைப் பயன்படுத்துங்கள். கண்களில் எண்ணெய் படாமல் கவனமாக இருங்கள்.
* மேல் மற்றும் கீழ் இமைகளில் தடவவும்.
*இரவு முழுவதும் அப்படியே விடவும், அடுத்த நாள் ழுவவும்.
அழகான சருமம், அடர்த்தியான புருவம், கண் இமைகளை பெற, இந்த சிம்பிள் விளக்கெண்ணெய் குறிப்பை மறக்காம டிரை பண்ணுங்க!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.