உண்மை என்னவென்றால், நம் சருமத்தை நாம் மிகவும் நேசிக்கிறோம், இன்று மட்டுமல்ல, பல ஆண்டுகளுக்குப் பிறகும் அது சிறந்த நிலையில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
ஆனால், ஒழுங்கற்ற தோல் பராமரிப்பு, மன அழுத்தம் மற்றும் சூரிய ஒளி போன்ற பல காரணங்களால் நமது சருமம் பொலிவை இழக்க நேரிடும். சரியான கவனிப்பு இல்லாவிட்டால், சருமம் மந்தமாகவும், தொடுவதற்கு கரடுமுரடானதாகவும் இருக்கும்.
சரும பராமரிப்பு என்று வரும்போது மாய்ஸ்சரைசர் அவசியம். ஆனால் ஒரு நல்ல மாய்ஸ்சரைசரை வாங்குவது விலை உயர்ந்ததாக இருக்கும். அது மட்டுமல்லாமல், அழகு தயாரிப்புகளில் பெரும்பாலானவை இரசாயனங்கள் நிறைந்தவை, அவை பெரும்பாலும் தோலுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் நீண்ட காலத்திற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
உங்கள் சருமத்தில் கடுமையான ரசாயனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு, வீட்டில் தயாரிக்கப்பட்ட இயற்கைப் பொருட்களுக்கு மாற விரும்பினால், நீங்கள் அதிர்ஷ்டசாலி.
டயட்டீஷியன் லாவ்லீன் கவுர் இன்ஸ்டாகிராமில்’ நீங்களே வீட்டில் இயற்கையான முறையில் செய்யக்கூடிய மாய்ஸ்சரைசர் ரெசிபியை பகிர்ந்து கொண்டார்.
வறண்ட, அரிக்கும் சருமத்துக்கு, நான் இதைத்தான் பயன்படுத்துகிறேன் என்று லாவ்லீன் கூறினார்.
மிருதுவான, மென்மையான சருமத்திற்கு மூன்று பொருட்கள் மட்டுமே தேவை.
தேவையான பொருட்கள்
50 மில்லி – ரோஸ் வாட்டர்
1 டீஸ்பூன் – கிளிசரின்
1– வைட்டமின் ஈ காப்ஸ்யூல்
எப்படி செய்வது?
மூன்றையும் ஒன்றாக கலந்து, ஒரு பாட்டிலில் சேமிக்கவும். ஷேக் செய்து பிறகு முகத்தில் அப்ளை செய்யவும்.
இந்த எளிதான தீர்வு, உங்கள் சருமத்துக்கு அதிசயங்களைச் செய்யும் என்று கவுர் கூறினார்.
உங்களுக்கும் வறண்ட, அரிக்கும் சருமம் மறக்காமல் இந்த மாய்ஸ்சரைசரை முயற்சி செய்யுங்கள்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“