scorecardresearch

வைட்டமின் சி சீரம், மாய்ஸ்சரைசர், ஐ கிரீம்.. சுஜிதா தனுஷ் பியூட்டி சீக்ரெட்ஸ்

எப்போவும் குளிச்சதுக்கு அப்புறம், தூங்குறதுக்கு முன்னாடி ஒரு 20 நிமிஷம் சரும பராமரிப்புக்கு நீங்க ஒதுக்கணும்- சுஜிதா தனுஷ்

வைட்டமின் சி சீரம், மாய்ஸ்சரைசர், ஐ கிரீம்.. சுஜிதா தனுஷ் பியூட்டி சீக்ரெட்ஸ்
Sujitha Dhanush Beauty tips

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனமாக நடித்து’ தமிழக மக்களின் மனதை கொள்ளைக் கொண்டவர் சுஜிதா தனுஷ். தனத்தை போல ஒரு மருமகள் வேண்டும் என்று நினைக்கும் மாமியார்களும், அவரை போல ஒரு அண்ணி, அக்கா வேண்டுமென நினைக்கும் இளம்பெண்களும் தமிழகத்தில் நிறைய பேர் உள்ளனர்.

இப்படி சின்னத்திரையில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் சுஜிதா தனுஷ், சமீபத்தில் விளம்பர இயக்குநராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார். சுஜிதா’ தென்னிந்திய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக’ தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தன் அண்ணன் சூர்யா கிரண் (நடிகர் மற்றும் இயக்குனர்) காரணமாகத்தான் சுஜிதாவுக்கு’ சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

வாழ்க்கையில் ஒரு கட்டத்தில்’ சீரியலா அல்லது சினிமாவா என்ற ஒரு நிலை வந்தபோது’  சுஜிதா சீரியலைத் தேர்ந்தெடுத்தார். பல முன்னணி சீரியல்களில் நடித்துள்ளார். இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனமாக நடித்து வருகிறார்.

சுஜிதா ’கதைகேளு கதைகேளு’ எனும் பெயரில் சொந்தமாக யூடியூப் சேனலும் வைத்துள்ளார். இப்போது சுஜிதாவுக்கு 40 வயதாகிறது. ஆனால் இன்றும் அதே இளமையுடன், பொலிவுடனும் பார்க்க அழகாக இருக்கிறார்.

இந்நிலையில் சுஜிதா தன்னுடைய சருமபராமரிப்பு குறித்து யூடியூப் வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.

அந்த வீடியோவில் சுஜிதா பேசுகையில்; என்னை பொறுத்தவரைக்கும் நான் சருமம், முடிக்கு ரொம்ப ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பேன். 30 வயசு வரைக்கும் நான் இது எதுவுமே பண்ணதில்ல. பார்லர் கூட போனதில்ல. நிறைய சீரியல் நடிச்சேன். என்னோட 14 வயசுலேயே ஹீரோயின் ஆயிட்டேன். அப்பகூட பார்லர் போனது கிடையாது

இப்படி இருக்கும் போதுதான் என்னோட க்ளோஸ் ஃபிரெண்ட், 30 வயசுக்கு மேல சரும பராமரிப்போட முக்கியத்துவம் பத்தி சொன்னா. நான் இந்த பிரொடக்ட் தான் யூஸ் பண்ணுங்கனு சொல்லமாட்டேன். உங்க வருமானத்துக்கு ஏத்தமாதிரி தரமான கம்பெனில, உங்களுக்கு பிடிச்ச பிரொடக்ட்ஸ் நீங்க யூஸ் பண்ணலாம். ஆனா, இந்த வழக்கத்தை கண்டிப்பா தொடரணும்.

ஓவர் நைட்ல எந்த பலனுமே கிடைக்காது, நீங்க வாழ்க்கை முழுக்க தொடர்ந்து பண்ணும்போதுதான் அதுக்கான ரிசல்ட் ஒரு 2-3 மாசத்துல தெரியும்.

எப்போவும் குளிச்சதுக்கு அப்புறம், தூங்குறதுக்கு முன்னாடி ஒரு 20 நிமிஷம் சரும பராமரிப்புக்கு நீங்க ஒதுக்கணும்.

நான் பச்சை தண்ணீர்ல தான் ஃபேஸ் வாஷ் பண்ணுவேன். ஃபேஸ் வாஷ் மட்டும்தான் யூஸ் பண்ணுவேன். உடம்புக்கு போடுறதுலாம் முகத்துக்கு போடக்கூடாது. சுடுதண்ணில குளிச்சாலும், முகத்துக்கு எப்போதுமே பச்சை தண்ணீர்தான். அப்புறம் க்ளென்சர் போட்டு முகத்தை நல்ல மசாஜ் பண்ணனும், பிறகு ஒரு நல்ல காட்டன் துணிய நனைச்சு,  க்ளென்சர் மேல தேய்க்கும்போது நம்ம முகத்துல இருக்கிற துளைகள் ஓபன் ஆயிடும்.

அப்புறம் ஆன்டி-ஆக்ஸிடன் வைட்டமின் சி சீரம் யூஸ் பண்ணனும். வைட்டமின் சி சீரம்’ 4-5 டிராப்ஸ் எடுத்து’ முகத்துல அப்ளை பண்ணுங்க. இதுக்கு பிறகு அண்டர் ஐ கீரிம், கண்ணுக்கு கீழே நல்ல தடவுங்க. கண்களை சுத்தி இருக்கிற தோல் ரொம்ப சென்சிட்டிவ். உங்களுக்கு வயசாகுதானா முதல் அறிகுறி கண்களுக்கு கீழே தான் தெரியும். அதுக்கு எக்ஸ்ட்ரா கவனிப்பு ரொம்ப ரொம்ப தேவை.

முகத்துல சீரம் செட் ஆன உடனே, மாய்ஸ்சரைசர் போடுவேன். இது சருமத்தை ஹைட்டிரேட் செய்ஞ்சு, மிருதுவாக்கும். உங்க முகம், கை, கால் எல்லா இடத்துலயும் காலை, இரவு கண்டிப்பா மாய்ஸ்சரைசர் போடுங்க..

நான் மாய்ஸ்சரைசர் அப்ளை பண்ண பிறகு ஒரு 5-10 நிமிஷம் அப்படியே விட்டுருவேன். நம்ம போட்டிருக்கிற சீரம், ஐ கீரிம், மாய்ஸ்சரைசரை நம்ம சருமம் நல்ல உறிஞ்சதுக்கு அப்புறம், கிளம்புறதுக்கு முன்னாடி கண்டிப்பா சன் ஸ்கீரின் லோஷன் யூஸ் பண்ணுவேன். இதேதான் இரவும் நான் பண்ணுவேன். மாய்ஸ்சரைசர் இரண்டு லேயர் அப்ளை பண்ணுவேன். ஆனா சன்ஸ்கீரின் போடமாட்டேன். ஓவர்நைட்ல சருமம் பளபளப்பாகுது. இதை தொடர்ந்து பண்ணுங்க, கண்டிப்பா உங்க சருமம் ஆரோக்கியமா இருக்கும் என்று முடிக்கிறார் சுஜிதா.

இதோ அந்த வீடியோ!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Skin care tips in tamil pandian stores serial sujitha dhanush beauty tips