நம் உடல் இயற்கையாகவே எண்ணெய்களை உற்பத்தி செய்கிறது, இது நம் சருமத்தைப் பாதுகாக்கிறது மற்றும் வறண்டு போவதை தடுக்கிறது. இருப்பினும், மோசமான வானிலை, அதிகமாக தேய்த்து குளிப்பது அல்லது தோல் அழற்சி போன்ற சில மருத்துவ நிலைகள் போன்றவை வறண்ட சருமத்திற்கு காரணமாக இருக்கலாம்.
Advertisment
பாலில் அதிக அளவு கொழுப்புகள் உள்ளன, அவை சருமத்தின் இழந்த ஈரப்பதத்தை நிரப்ப உதவுகிறது. மேலும், பாலில் உள்ள லாக்டிக் அமிலம் ஒரு சிறந்த எக்ஸ்ஃபோலியேட்டர் ஆகும், இது இறந்த செல்களை அகற்ற உதவுகிறது, புதிய செல்கள் வர அனுமதிக்கிறது மற்றும் மாய்ஸ்சரைஸ் லோஷன், கிரீம்கள் சிறப்பாக உறிஞ்சுவதற்கு வழிவகுக்கிறது.
இது தவிர, பால் வைட்டமின் ஏ, பி6, பி12, டி, பயோட்டின் மற்றும் பொட்டாசியம், செலினியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுப்பொருட்களின் நல்ல மூலமாகும், இது புதிய ஆரோக்கியமான செல்களை உருவாக்க உதவுகிறது.
வறண்ட சருமத்திற்கான மற்ற முக்கிய காரணங்களில் ஒன்று ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் தோல் செல்களின் வீக்கம் ஆகும். இதன் விளைவாக வறண்ட மற்றும் திட்டுத் தோல் ஏற்படும்.
குர்குமின் என்பது மஞ்சளில் செயலில் உள்ள பொருளாகும், இது சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இது ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க உதவுகிறது, வறண்ட சருமத்திற்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.
எப்படி செய்வது?
உள்ளங்கையில் சிறிது பால், சிறிது மஞ்சள் எடுத்து பேஸ்ட் செய்து முகம், கழுத்து பகுதிகளில் தடவி உலர்வதற்கு முன் கழுவவும்.
குறிப்பு: மஞ்சளை அதிகமாகப் பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் அது சருமத்தை அப்படியே மஞ்சளாக்கி விடும்.
முகப்பரு பாதிப்புள்ள சருமம் அல்லது சென்சிட்டிவ் சருமம் உள்ளவர்கள், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வீட்டு வைத்தியம் அல்லது சுய மருந்துகளை முயற்சிக்கக் கூடாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“