தொற்று நோய் காரணமாக, இன்னும் நம்மில் பெரும்பாலோர் வீட்டிலிருந்து தொடர்ந்து வேலை செய்கிறோம். வெளியில் உள்ள வெப்பம் மற்றும் தூசிக்கு நம்மை வெளிப்படுத்தாமல் இருக்கிறோம். ஆனாலும் சருமத்தை கவனித்துக்கொள்வது முக்கியம். அதற்கு, நீங்கள் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுடன் உணவளிக்க வேண்டும் மற்றும் நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும்.
தர்பூசணி பழம், உங்கள் சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை தரும்.
நீங்கள் வீட்டில் தயார் செய்யக்கூடிய சில எளிய ஃபேஸ் மாஸ்க் இங்கே உள்ளன;
தர்பூசணி சாறு மற்றும் தேன்
தர்பூசணி சுவையானது. ஆனால் அதைக் குடிப்பதற்குப் பதிலாக, உங்கள் டேனிங் நீக்குவதற்கு தேனுடன் பயன்படுத்தவும்.

இதற்கு, உங்களுக்கு இரண்டு தேக்கரண்டி குளிர்ந்த தர்பூசணி சாறு மற்றும் இரண்டு ஸ்பூன் தேன் தேவைப்படும். அதை பேஸ்ட் பதத்துக்கு நன்றாக கலக்கவும். இப்போது முகத்தை கழுவிய பிறகு, பேஸ்ட்டை அப்ளை செய்யவும். கூடுதலாக அதை உங்கள் கை மற்றும் கால்களில் தடவலாம். சிறிது நேரம் அப்படியே விட்டு, பிறகு தண்ணீரில் கழுவவும். டேனிங் நீங்கவும், உங்கள் சருமம் பளபளப்பாகவும் இருக்க இதைத் தொடர்ந்து செய்யுங்கள்.
தர்பூசணி சாறு மற்றும் எலுமிச்சை
வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு, உங்களுக்கு ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் அரை தேக்கரண்டி தேன் தேவைப்படும். அவற்றை சிறிது தர்பூசணி சாறுடன் கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவவும். குறைந்தபட்சம் 15 நிமிடங்களுக்கு ஃபேஸ் பேக்கை விட்டுவிட்டு, பின்னர் தண்ணீரில் கழுவவும்.
தர்பூசணி சாறு மற்றும் தயிர்

தர்பூசணி மற்றும் தயிர் இரண்டும் சருமத்திற்கு சிறந்தது. சருமத்தின் தன்மையை மேம்படுத்த, குறிப்பாக நீங்கள் ஆன்டி ஏஜிங் ஃபேஸ் மாஸ்க் தேடுகிறீர்களானால், தயிருடன் சிறிது தர்பூசணி சாற்றைக் கலந்து பயன்படுத்தலாம். இதற்கு, உங்களுக்கு ஒரு தேக்கரண்டி தயிர் மற்றும் சிறிது தர்பூசணி சாறு தேவைப்படும். இரண்டையும் ஒரு கிண்ணத்தில் கலந்து பேஸ்ட் செய்த பிறகு, முகம், கை மற்றும் கழுத்தில் தடவவும். 20 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் அதை அப்படியே விட்டு, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“