கண்களுக்குக் கீழே உள்ள தோல் உடலிலேயே மிகவும் மெல்லிதானது, வயதாகும் போது, உங்கள் முகத்தின் இந்த பகுதி மிகவும் பாதிக்கப்படக்கூடியதாக மாறும். மரபியல் உடன், தூக்கமின்மை, மன அழுத்தம், சோர்வு, நீரிழப்பு, ஒவ்வாமை மற்றும் சூரிய பாதிப்பு போன்ற பல்வேறு காரணிகள் கண்களை சுற்றி ஹைப்பர் பிக்மென்டேஷன் அல்லது கருவளையங்களுக்கு வழிவகுக்கும்.
இந்த ஹைப்பர் பிக்மென்டேஷனை முற்றிலுமாக ஒழிப்பது கடினம், ஆனால் அதிக தீங்கு விளைவிக்காமல் கண்களுக்குக் கீழே சருமத்தின் நிறத்தை ஒளிரச் செய்யும் இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் அதைக் குறைக்கலாம். கண்ணுக்குக் கீழே கடுமையான இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது முக்கியம்.
உணவியல் நிபுணர் கரிமா கோயல் கூற்றுப்படி, உங்கள் கருவளையங்களைப் போக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்களின் பட்டியல் இங்கே:
ரோஸ் வாட்டர்
ரோஸ் வாட்டர் சருமத்தை ஒளிரச் செய்யும் விளைவைக் கொண்டிருக்கிறது, மேலும் இந்தப் பகுதியைத் தணித்து அமைதிப்படுத்துகிறது. மேலும் பன்னீரின் புத்துணர்ச்சியூட்டும் வாசனையால் புலன்கள் தளர்வடைகின்றன. காட்டன் பஞ்சை தண்ணீரில் ஊறவைக்கவும், பின்னர் இயற்கையான ரோஸ் வாட்டரில் வைக்கவும். சிறந்த முடிவுகளுக்கு வாரத்திற்கு இரண்டு முறையாவது இதை கண்களின் கீழ் தடவவும்.
பால்
பாலில் லாக்டிக் அமிலம் இருப்பதால் பிக்மென்டேஷனை குறைக்கலாம். மேலும், குளிர்ந்த பால் கண்களுக்குக் கீழே உள்ள ரத்த நாளங்களை தளர்த்தும்.
பச்சைப் பாலை காட்டன் பஞ்சில் நனைத்து, கண்ணின் கீழ் மெதுவாகப் பூசினால் சிறந்த பலன் கிடைக்கும்.
டீ பேக்ஸ்
கண்களின் கீழ் விரிந்த ரத்த நாளங்கள் ஹைப்பர் பிக்மென்டேஷனை ஏற்படுத்துகின்றன. பாலிஃபீனால்கள் மற்றும் கேடசின்களைக் கொண்டிருப்பதால், இரவில் குளிர்ந்த டீ பேக்ஸை உங்கள் கண்களில் வைப்பதன் மூலம் இதை சுருக்கலாம்.
சிறந்த முடிவுகளுக்கு, குளிர்ந்த நீரில் நனைத்து பிழிந்து கிரீன் டீ பேக்ஸை பயன்படுத்தவும்.

புதினா இலைகள்
புதினா இலைகளில் உள்ள மெத்தனால் சருமத்தின் கீழ் நீர் தேங்குவதைக் குறைத்து, தோலின் கீழ் வீக்கத்தைக் குறைக்கிறது. 8-10 புதினா இலைகளை சிறிதளவு தண்ணீரில் நசுக்கி மென்மையான பேஸ்ட்டை உருவாக்கி, கண்களுக்குக் கீழே அது காய்ந்து போகும் வரை தடவவும்.
நெல்லி
வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த நெல்லி கண்களுக்குக் கீழே உள்ள தோலின் மீளுருவாக்கம் மற்றும் ஆரோக்கியமான பளபளப்புடன் சருமத்தை புதுப்பிக்க உதவுகிறது. நெல்லிக்காய் பொடி மற்றும் தேன் கலந்து மென்மையான பேஸ்ட்டை கண்களுக்கு அடியில் தடவவும்.
குங்குமப்பூ
இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், குறிப்பாக கண்களின் கீழ் நிறத்தை குறைக்க உதவுகிறது. குங்குமப்பூவை பச்சை பாலில் ஊறவைத்து, பின்னர் இதை கண்களின் கீழ் கருவளையம் உள்ள பகுதியில் உங்கள் விரல் நுனிகளால் தடவவும், இரவு முழுவதும் வைத்து, மறுநாள் காலையில் முகத்தை கழுவவும்.
தக்காளி சாறு
இந்தப் பழத்தில் உள்ள லைகோபீன் ப்ளீச்சிங் மற்றும் சருமத்தை ஒளிரச் செய்யும் பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் தக்காளியில் வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் பொட்டாசியம் இருப்பதால் ஆரோக்கியமான சருமத்தை அளிக்கிறது.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய் அதன் ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் காரணமாக கண்களின் கீழ் ஹைப்பர் பிக்மென்டேஷன் குறைக்கிறது. இதில் உள்ள அதிக நீர்ச்சத்து சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். இது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களில் 10-15 நிமிடங்கள் வைக்கவும்.
ஐஸ் கியூப்ஸ்
கண்களின் கீழ் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம், அவை வீக்கத்தின் அளவைக் குறைக்கின்றன.
ஐஸ் கட்டிகளை நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதியில் வைக்கவும் அல்லது காட்டன் கர்சீஃபில் மடித்து வைக்கவும்.
எலுமிச்சை சாறு
வைட்டமின் சி மற்றும் எலுமிச்சையின் ப்ளீச்சிங் பண்புகள் சருமத்தை ஒளிரச் செய்து, பிக்மென்டேஷனை குறைக்க உதவுகின்றன. தக்காளி மற்றும் எலுமிச்சை சாற்றை கண்களின் கீழ் தடவினால் வீக்கம் குறையும்.
கற்றாழை
சருமத்தின் ஆழமான ஊட்டச்சத்து மற்றும் ஒரு இனிமையான விளைவுக்கு, கற்றாழை ஜெல் பயன்படுத்தவும். இது சருமத்தை ஈரப்பதமாக்குகிறது, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
கண்களுக்குக் கீழே உள்ள தோலில் ஜெல்லை மசாஜ் செய்யவும்.
கருவளையங்கள் குணமடைய நேரம் எடுக்கும் மற்றும் ஒரே இரவில் மறைந்துவிடாது. சமநிலையான உணவு, வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் இயற்கையான பொருட்களுடன் கூடிய நல்ல தோல் பராமரிப்பு ஆகியவை கருவளையங்களை குணப்படுத்துவதற்கும் சிறந்த வழியாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“