வியர்வை மற்றும் எண்ணெய் படிவுகளை அகற்ற சருமத்தை சுத்தப்படுத்தி புத்துணர்ச்சியூட்டுவது அவசியம். ஸ்க்ரப்பிங் செய்வது உங்கள் சருமப் பராமரிப்பு வழக்கத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும், இது இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது. சரும துளைகளில் இருந்து அசுத்தங்கள் மற்றும் அதிகப்படியான எண்ணெய்யை நீக்க உதவும்.
ஒரு முழுமையான ஸ்க்ரப் செய்த பிறகு, ஃபேஸ் மாஸ்க் அணிவது அல்லது உங்கள் முகத்தில் ஏதேனும் மூலிகைப் பொருட்களை அப்ளை செய்வது அவசியம், ஏனெனில் எக்ஸ்பாலியேஷன் செய்வதால், சருமத்தில் துளைகள் திறக்கிறது. நீங்கள் மாஸ்க் அணியாவிட்டால் அதில் அழுக்கு குவிந்து விடும்.
பாதாம் ஸ்க்ரப் எப்படி செய்வது?
4-5 பாதாம் பருப்புகளை மிக்ஸியில் மையாக அரைக்கவும்.
2 டீஸ்பூன் தேன்
2 டீஸ்பூன் ஆர்கான் எண்ணெய். இது ஸ்வீட் பாதாம் எண்ணெய், அவகடோ எண்ணெய், ஆலிவ் எண்ணெய் அல்லது உங்கள் சருமத்துக்கு ஏற்ற வேறு எந்த எண்ணெயையும் பயன்படுத்தலாம்.

முகத்தை சுத்தம் செய்த பிறகு, ஸ்க்ரப்பை குறைந்தது 5 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். மென்மையாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். முகப்பரு இருந்தால் ஸ்க்ரப்பிங் செய்வதைத் தவிர்க்கவும்.
மசாஜ் செய்த பிறகு குறைந்தது 10 நிமிடங்களுக்கு ஸ்க்ரப்பை மாஸ்க் போல வைக்கவும். இதை 15 நிமிடங்கள் வைத்திருந்தால் இன்னும் நல்லது.
இப்போது மெதுமெதுவாக மசாஜ் செய்து உங்கள் முகத்தை கழுவவும்.
கடைசியாக உங்களுக்கு பிடித்த மாய்ஸ்சரைசர் அல்லது ஃபேஷியல் எண்ணெய் சில துளிகள் எடுத்து, முகத்தில் தடவவும்.
பாதாம் சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. பாதாமில் நிறைவுறா கொழுப்புகள், வைட்டமின் ஈ மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. தூள் செய்யப்பட்ட பாதாம் ஒரு எக்ஸ்ஃபோலியண்ட்டாக செயல்படுகிறது, மேலும் இறந்த மற்றும் வறண்ட சருமத்தை நீக்குகிறது.
தேன் கிளீன்ஸராக செயல்படுகிறது, அதேவேளையில் சருமத்துக்கு ஈரப்பதமூட்டுகிறது.
குறிப்பு: உங்களுக்கு முகப்பரு இருந்தால், உங்கள் முகத்தில் ஸ்க்ரப்பைப் பயன்படுத்த வேண்டாம், அது உங்கள் தோல் பிரச்சனையை மோசமாக்கும்.
தொடர்ந்து ஸ்க்ரப்பிங் செய்வது, சருமத்தின் அமைப்பை சேதப்படுத்தும். எனவே வாரத்திற்கு ஒரு முறை ஸ்க்ரப்பிங் செய்வது நல்லது என பரிந்துரைக்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”